‘நட்டி’ன்னா பாலிவுட் ஹீரோயின்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்: ‘மிளகா’ நட்ராஜ்
மும்பை: நட்டி என்கிற நட்ராஜ் பாலிவுட் கொண்டாடும் பச்சைத்தமிழன். சிறந்த ஒளிப்பதிவாளராக முத்திரைப் பதித்த போதும், அவ்வப்போது தமிழ் மசாலா படங்களிலும் தலையைக் காட்டும் கலாரசிகன்.
மிளகாய், முத்துக்கு முத்தாக என படங்களின் பெயரைச் சொன்னாலே உக்களுக்குப் புரிந்து விடும் அளாவிற்கு மிகச்சில படங்களிலேயே நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் நிழலாடும் திறமைசாலி.
பாலிவுட்டைக் கலக்கிவரும் பல முண்ணனி நாயகிகளுடன் பணி புரிந்த அனுபவங்களை இப்படி பகிர்ந்து கொள்கிறார் நட்டி...

வித்யாபாலன்
வித்யாபாலன், நம்ம ஊரு பொண்ணு. லேடி சல்மான்கான். மொத்தப்படத்தையும் ஒத்த ஆளா தூக்கிச் சுமப்பாங்க. என் உயிர்த்தோழி.

நா ரெடி... கதை ரெடியா..?
‘எங்க ஊர்லயும் பிரமாதமான படங்கள் பண்றோம். கண்டுக்கங்க'னு சொல்லி கலாய்ப்பேன். ‘ஆரம்பத்துல அங்கே என்னை வரவேற்றாங்க, ஆனா தனிப்பட்ட சில மனிதர்களால் பிரச்சினை. எனக்கு நடிக்கத் தெரியலனு கிளப்பி விட்டுட்டாங்க. ஆனா, உனக்காக உன் கூட சேர்ந்து நடிக்க ரெடி. எப்பனு சொல்லு'ம்பாங்க.

தீபிகா....
தீபிகா படுகோன், செம அழகி. அவங்களோட மூணு படம் பண்ணிருக்கேன். ஒரு படத்துல அவங்களுக்கு பார்வையில்லாத பெண் வேடம். டைமிங்ல மிரட்டியிருப்பாங்க.

சோனம் கபூர்....
பரபர பப்ளி கேர்ள் சோனம் கபூர். ‘ மிந்த சீன்ல இந்தப் பொண்ணு சொதப்பிரும்'னு நினைக்கும் போது, அது வேற மாதிரி மிரட்டிரும்.

சோனாக்ஷி சின்ஹா...
சோனாக்ஷி சின்ஹா, காவிய அழகி. செம தைரியசாலிப் பொண்ணு.

நா ஸ்பெஷல் பிரண்ட்....
மொத்தத்துல ‘நட்டி'ன்னா பாலிவுட் ஹீரோயின்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான். இவங்க எல்லாரோட ‘குட் புக்'லயும் நான் இருக்கேன்' என மனம் திறந்துள்ளார் நட்டி என்கிற நட்ராஜ்.


Click it and Unblock the Notifications











