அம்மா இறந்த பிறகு எல்லாமே மாறிடுச்சு: ஸ்ரீதேவி மகள் ஜான்வி உருக்கம்
மும்பை: அம்மா இறந்த பிறகு குடும்பத்தில் அனைத்தும் மாறிவிட்டதாக ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இதை பார்த்து மகிழ ஸ்ரீதேவி இல்லையே என்ற வருத்தம் குடும்பத்தாருக்கும், பாலிவுட்காரர்களுக்கும்.

ஸ்ரீதேவிக்கு தனது கணவரின் மூத்த தாரத்து மகனான நடிகர் அர்ஜுன் கபூரின் விரோதத்தை நினைத்து தான் பயம். ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். தன் தாயின் வாழ்க்கையை கெடுத்ததால் ஸ்ரீதேவி மீது கோபப்பட்ட அர்ஜுன் ஜான்வி மற்றம் குஷி கபூர் ஆகியோரை தனது சொந்த தங்கைகள் போன்று பாசமாக பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் இது குறித்து ஜான்வி கூறியதாவது,
அம்மா இறந்த பிறகு குடும்பத்தில் எல்லாமே மாறிவிட்டது. முன்பை விட நாங்கள் நெருக்கமாகிவிட்டோம். கடந்த சில மாதங்களாக அப்பா தான் எங்களுக்கு அம்மாவாக உள்ளார். அர்ஜுன் அண்ணா எங்களை ரொம்ப பாசமாக பார்த்துக் கொள்கிறார். அர்ஜுன் அண்ணா மற்றும் அன்ஷுலா அக்கா எங்களின் பலம்.
அவர்கள் இருவரும் எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டனர் எனறார்.


Click it and Unblock the Notifications











