நான் துவண்டு விழும் போதெல்லாம்.. அஜித் தட்டிக் கொடுத்து சொல்லும் அந்த வார்த்தை – வினோத் நெகிழ்ச்சி

சென்னை: வலிமை படத்தின் இயக்குநர் எச். வினோத் அஜித் தனக்கு கொடுக்கும் எனர்ஜி டானிக் அட்வைஸ் குறித்து கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வலிமை படம் குறித்த அத்தனை விஷயங்களையும் இயக்குநர் எச். வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கி இருந்தார்.

வலிமை டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அஜித் சொன்ன அதே அட்வைஸை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

வலிமை இயக்குநர்

வலிமை இயக்குநர்

சதுரங்க வேட்டை படத்தை இயக்குநராக அறிமுகமானவர் எச். வினோத். கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் இயக்குநர் வினோத்தை தமிழ் சினிமாவின் தரமான இயக்குநராக மாற்றியது. நடிகர் அஜித்தை இயக்கும் வாய்ப்பு நேர்கொண்ட பார்வை படம் மூலம் கிடைக்க இப்போ வலிமை இயக்குநராக மாறி உள்ளார் வினோத்.

நல்ல ஆரம்பம் இல்லை

நல்ல ஆரம்பம் இல்லை

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்துக்கு முதன் முதலாக எச். வினோத் அனுப்பிய நெகட்டிவ் ஷேட் கதை ஓகே ஆகாமல் ரிஜெக்ட் ஆனதும் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார் வினோத். ஆனால், அதற்கு பதிலாக பிங்க் படத்தின் ரீமேக் படத்தை இயக்கும் வாய்ப்பு எச். வினோத்துக்கு கிடைத்ததும் தனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகவே நினைத்து படத்தை இயக்கி உள்ளார்.

குட் புக்

குட் புக்

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குநர் எச். வினோத் நடிகர் அஜித்தின் குட் புக்கில் இடம் பெற்று விட்டார். சிறுத்தை சிவாவுக்கு தொடர்ந்து 4 படங்களை இயக்க கொடுத்த நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை படத்தை இயக்க வைத்த நிலையில், அடுத்த படத்தையும் எச். வினோத்தையே இயக்க சொல்லி விட்டார்.

எல்லாம் சரியாக நடக்கும்

எல்லாம் சரியாக நடக்கும்

வலிமை படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்துக்கு நேர்ந்த விபத்து, கொரோனா லாக்டவுன் என ஏகப்பட்ட தடைகள் வந்தன. அது போன்ற சமயங்களில் நான் துவண்டு விழும் போதெல்லாம் எனது தோளை தட்டி நடிகர் அஜித் எல்லாமே சரியாக நடக்கும் என சொன்ன அட்வைஸ் தான் என்னை இன்னமும் அதிகமாக ஓட வைக்கிறது எனக் கூறியுள்ளார்.

வலிமை டிரைலர்

வலிமை டிரைலர்

வலிமை படத்தின் டிரைலர் சோனி மியூசிக் சவுத் யூடியூப் தளத்தில் நாளை வெளியாகும் என உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. வலிமை படத்தின் டிரைலரை இதுவரை வெளியான படங்களின் டிரைலரை விட அதிகளவில் பார்த்து ஒரே நாளில் ஏகப்பட்ட சமூக வலைதள சாதனைகளை படைக்க அஜித் ரசிகர்கள் தயாராகி உள்ளனர். சோஷியல் மீடியாவே சும்மா தெறிக்கப் போகுது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X