திரும்ப திரும்ப பார்த்து பார்த்து.. அனிருத் - ஆண்ட்ரியா மலேசியாவில் ஒரே மேடையில்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக அந்த ஊரையும் தளபதி ரசிகர்கள் டிராபிக் ஜாம் செய்து அரங்கம் முழுவதும் TVK கோஷம் முழங்க கொண்டாடி வருகின்றனர்.
இன்று மதியம் 3 மணிக்கே தளபதி திருவிழா ஆரம்பமாகி விட்டது. ராக்ஸ்டார் அனிருத் தலைமையில் நடைபெற்று வரும் இசை கச்சேரியில் ஆண்ட்ரியா, அனுராதா ஸ்ரீராம், எஸ்பிபி சரண், கிருஷ் உள்ளிட்ட ஏகப்பட்ட பாடகர்கள் பாடி ரசிகர்களை வைப் ஆக்கி வருகின்றனர்.

முன்னாள் காதலர்களான அனிருத் மற்றும ஆண்ட்ரியா ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டதை சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் பங்கமாக வீடியோ எடிட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஒரு சின்ன தாமரை: விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற "ஒரு சின்னத் தாமரை பாடலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாடிய காட்சிகளை சோஷியல் மீடியாவில் தளபதி கச்சேரிக்கு சென்ற ரசிகர்கள் வீடியோக்களாக எடுத்துப் போட்டு வருகின்றனர். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஆண்ட்ரியா இணைந்து நடித்திருந்தார். அந்த படத்துக்கும் அனிருத் தான் மியூசிக். இந்நிலையில், அனிருத் - ஆண்ட்ரியாவின் மலேசிய சந்திப்பை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அனிருத் - ஆண்ட்ரியா சந்திப்பு: சிம்பு மற்றும் நயன்தாரா பிரேக்கப் செய்து பிரிந்த பின்னரும் பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு' படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தனர். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல அனிருத் மற்றும் ஆண்ட்ரியா பல இடங்களில் சந்தித்துக் கொண்டாலும், மலேசியாவில் இருவரும் ஒரே மேடையில் விஜய்க்காக சந்தித்துக் கொண்டதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து: சர்வதேச அளவில் வைரல் ஸ்டாரான ஸ்பீடின் வீடியோவை எடிட் செய்து போட்டு "திரும்ப திரும்ப பார்த்து பார்த்து" பாடலையும் மேட்ச் செய்து போட்டு கலாய்த்துள்ள வீடியோவை விஜய் ரசிகர்களே வைரலாக்கி வருகின்றனர். கண்டிப்பாக கூடிய சீக்கிரம் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா ஹக் செய்து சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











