மெளனமான நேரம்.. அந்த ஜெயப்ரதா இப்ப எப்படி நடிக்கப் போறாங்க தெரியமா??

By Vignesh Selvaraj

சென்னை : 'மன்மதலீலை', 'நினைத்தாலே இனிக்கும்', 'சலங்கை ஒலி' உள்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. கடைசியாகத் தமிழில், 'தசாவதாரம்' படத்தில் நடித்தார்.

இந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயப்பிரதா அரசியலில் குதித்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இப்போது அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மீண்டும் சினிமாவில் :

மீண்டும் சினிமாவில் :

6 வருடங்களுக்குப் பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'யாகம்' என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெயப்பிரதா. இதில் அவர் புதுமுக ஹீரோ ஆகாஷ்குமாரின் தாயாக நடித்துள்ளார். நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், நெப்போலியன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஷங்கரின் உதவியாளர் என்.நரசிம்மா இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

நெப்போலியன் ஜோடி :

நெப்போலியன் ஜோடி :

'அரசியலுக்கு சென்று விட்டு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கும் நானும், நெப்போலியனும் இதில் ஜோடியாக நடித்திருக்கிறோம். மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தபோது இயக்குனர் நரசிம்மா இந்தக் கதையை என்னிடம் கூறினார். அவர் கதை சொன்னவிதமும் பிடித்திருந்தது.

தாய் - மகன் அன்பு :

தாய் - மகன் அன்பு :

ஒரு தாய்க்கும், மகனுக்குமான அன்பைச் சொல்லும் படம். இன்னொரு புறம் ஃபேன்டசி கதையாகவும் இருக்கும். தீய சக்திகளிடமிருந்து மகனைக் காக்கப் போராடும் காட்சியில் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன்.

தமிழில் நடிப்பதே மகிழ்ச்சி :

தமிழில் நடிப்பதே மகிழ்ச்சி :

பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் தமிழில் நடிக்கும்போது தனி சந்தோஷம் இருக்கும். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன்' எனப் பட விழாவில் கூறியிருக்கிறார் ஜெயப்பிரதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X