ஏலத்துக்கு வந்த ஆபாச பட நடிகை மியா கலிஃபாவின் கண்ணாடி.. ஏன்னு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க!

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது மூக்குக் கண்ணாடியை ஏலம் விட்டுள்ளார் மியா கலிஃபா.

Recommended Video

Mia Khalifa Unknown Facts: மியா வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள்

ஆபாச பட நடிகையான மியா கலிஃபாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்த நிலையில், அந்த துறையை விட்டு தற்போது ஸ்போர்ட்ஸ் கமெண்டேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை மியா கலிஃபாவின் இந்த செயல், பலரையும் பாராட்ட வைத்து வருகிறது.

மூன்று மாதங்கள் மட்டுமே

மூன்று மாதங்கள் மட்டுமே

லெபனான் - அமெரிக்க பெண்ணான மியா கலிஃபா மூன்று மாதங்கள் மட்டுமே ஆபாச பட நடிகையாக நடித்து இருந்தார். ஆனால், அவர் வெளியிட்ட வீடியோக்கள் உலகளவில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வைரலாகின. அதன் மூலம் சன்னி லியோனுக்கு அடுத்த படியாக உலகளவில் புகழ்பெற்ற ஆபாச பட நடிகையாக மியா கலிஃபா மாறினார்.

பயங்கரவாத மிரட்டல்

பயங்கரவாத மிரட்டல்

தொடர்ந்து ஆபாச பட நடிகையாக நடித்தால் உன்னை கொன்று விடுவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்த நிலையில், ஆபாச பட தொழிலை கைவிட்ட நடிகை மியா கலிஃபா, விளையாட்டுத் துறையில் பேச்சாளராக தற்போது பணியாற்றி வருகிறார். மேலும், சமூக சேவையிலும் தனது பங்கை செலுத்தி வருகிறார்.

லெபனான் வெடி விபத்து

லெபனான் வெடி விபத்து

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதன் வீடியோக்கள் வெளியாகி உலகையே அதிர வைத்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மியா கலிஃபா முன் வந்துள்ளார்.

கண்ணாடியை ஏலம் விட்டு

கண்ணாடியை ஏலம் விட்டு

யாராவது செக்ஸியாக டிரெஸ் பண்ணி, அந்த மூக்குக் கண்ணாடியை போட்டாலே போதும் மியா கலிஃபா என கிண்டல் செய்யும் அளவுக்கு பிரபலமான தனது கண்ணாடியை தற்போது ஏலத்துக்கு விட்டுள்ளார் நடிகை மியா கலிஃபா. இ-பேயில் சுமார் 50 ஆயிரம் டாலர்களுக்கு தொடங்கப்பட்ட அந்த ஏலத் தொகை தற்போது வரை 1 லட்சம் அமெரிக்க டாலர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

எல்லாமே நாட்டிற்காக

எல்லாமே நாட்டிற்காக

அந்த ஏலத்தில் தனக்கு கிடைக்கும் மொத்த தொகையையும் லெபனான் நாட்டு வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு கொடுக்கப்படும் என மியா கலிஃபா பதிவிட்டுள்ள நல்ல நோக்கத்தை பார்த்தே பலரும் அதன் ஏலத் தொகையை அதிகரித்து வருகின்றனர். விரைவில் அந்த கண்ணாடியை யார் வாங்குகிறார் என்ற விபரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X