என் மீது பொய் வழக்கு போட்டுள்ளார் இமான்.. இரண்டாம் திருமணத்திற்கு பிறகு வெளியான உண்மை !

சென்னை : இசையமைப்பாளர் டி இமான், என் மீது பொய் வழக்கு போட்டார் என்று அவரது முன்னாள் மனைவி மோனிகா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் ரஜினி, அஜித், விஜய் என சூப்பர் ஸ்டார்களுக்கு இசையமைத்துள்ளார்.

டி.இமான், விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றிருந்த கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமானுக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மனைவியை விட்டு பிரிந்தாலும் குழந்தைகளை சந்திக்க இமானுக்கு குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவி மோனிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இதையடுத்து,கடந்த வாரம் சத்தமே இல்லாமல் கோலிவுட் நடிகர் உபால்டின் மகள் அமெலியாவை இசையமைப்பாளர் டி இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Recommended Video

சத்தமே இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்த D.Imman.. பொண்ணு யார் தெரியுமா ? | Filmibeat Tamil
என் மீது பொய் வழக்கு போடுகிறார்

என் மீது பொய் வழக்கு போடுகிறார்

இதையடுத்து, இமானின் முன்னாள் மனைவி மோனிகா, இசையமைப்பாளர் இமான், தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி என் மீது பொய் வழக்கு போட்டு இருப்பதாக கூறியுள்ளார். இமானிடம், குழந்தைகளின் பாஸ்போர்ட்டை தரும்படி கேட்டபோது, வீடு மாறும் போது அவை, தொலைத்துவிட்டதாக கூறினார் என்றும், அதன் பிறகே புதிய பாஸ்போர்ட்டை பெற விண்ணப்பித்ததாக கூறியுள்ளார். மோனிகா கூறியுள்ள தகவலால் இமானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X