குஷியாகும் அஜித் ரசிகர்கள்...விரைவில் ரிலீஸ்...வலிமை லேட்டஸ்ட் அப்பேட் இதோ
சென்னை : தல அஜித் நடிக்கும் வலிமை, மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல தியேட்டர் உரிமையாளர்களும் வலிமை ரிலீசுக்காக காத்திருக்கிறார்கள்.
கொரோனா லாக்டவுனிற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது தியேட்டர் உரிமையாளர்களை அச்சம் கொள்ள வைத்தது.. ஆனால் மாஸ்டர் பட ரிலீசால் மீண்டும் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வர துவங்கியது.

நம்பிக்கை தந்த மாஸ்டர்
மற்ற படங்கள் வெற்றி அடையாத போது, மாஸ்டர் படம் மக்களின் மனதை கவர்ந்தது. ஒரு மாதத்தை கடந்தும் தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தியேட்டர் உரிமைகள் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான வலிமை ரிலீசானால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்களின் தொழிலை அது தூக்கி நிறுத்தும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்புகிறார்கள். இதனால் தியேட்டர் உரிமையாளர்களே இப்போது வலிமை அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

ரிலீசை நெருங்குகிறது
இந்த படத்தில் அஜித் நடித்த பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் வலிமை படக்குழு ஸ்பெயின் செல்ல உள்ளது. அதற்கு முன் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் துவங்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு மத்தியில், அதாவது ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

துவங்கியது எடிட்டிங் வேலை
டைரக்டர் ஹச்.வினோத் ஏற்கனவே எடிட்டிங் வேலைகளை விஜய் வேலுகுட்டியை வைத்து துவக்கி விட்டார். இதற்கு முன் சங்கு சக்கரம், ஜோதிகாவின் ஜாக்பாட் படங்களில் விஜய் வேலுக்குட்டி பணியாற்றி உள்ளார்.
போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











