விஷாலின் எனிமி...படப்பிடிப்பு, டீசர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்

சென்னை : அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் படம் எனிமி. இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை மினி ஸ்டூடியோ பேனரில் வினோத் குமார் தயாரிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் 60 நாட்களுக்கும் மேலாக துபாயில் நடைபெற்றது. துபாயில் படப்பிடிப்பு முடித்து திரும்பிய பிறகு படக்குழு வெளியிட்ட சூட்டிங்ஸ்பாட் ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது, டீசர் எப்போதும் வெளியிடப்படும் என்ற லேட்டஸ்ட் அப்டேட்டை தயாரிப்பாளர் வினோத் குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்

தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்

அதில் அவர், எனிமி அப்டேட் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்காக இந்த பதிவை வெளியிடுகிறேன். நண்பர்களே, படத்தின் வேலைகள் 90 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. அது சென்னையில் நடைபெற உள்ளது.

டீசர் ரிலீஸ் எப்போது

அத்துடன் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து விடும். படப்பிடிப்பை முடித்த பிறகு இன்னும் 2 வாரங்களில் எனிமி படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார் வினோத். தயாரிப்பாளரின் இந்த ட்வீட் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பதிலடி கொடுத்த வினோத்குமார்

பதிலடி கொடுத்த வினோத்குமார்

வினோத்குமாரின் இந்த பதிவிற்கு கருத்து பதிவிட்ட நெட்டிசன் ஒருவர், யாரு இப்போ அப்டேட் கேட்டது என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முகத்தில் அரைந்தது போல் பதிலடி கொடுத்துள்ளார் வினோத். மரியாதையுடன் கருத்து பதிவிட வேண்டும் என வினோத் குமார் அளித்துள்ள சூடான பதில் ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூடுதல் ஹைலைட்

கூடுதல் ஹைலைட்

இதனால் டீசர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இதில் விஷால் ஹீரோவாகவும், அவருக்கு வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலும், ஆர்யாவும் இணைந்து நடிப்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் ஹைலைட்டாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X