twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எக்ஸ்க்ளூசிவ்: லிங்காவை பெரும் விலைக்கு பேரம் பேசும் வேந்தர் மூவீஸ்

    By Shankar
    |

    சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் தமிழகம் மற்றும் கேரள உரிமையை பெரும் விலைக்குப் பேசி வருகிறது வேந்தர் மூவீஸ் நிறுவனம்.

    தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் வேந்தர் மூவீஸ். மதன் மற்றும் டி சிவா தலைமையில் இயங்கும் இந்த நிறுவனம் படங்களைத் தயாரிப்பதுடன், பல வெற்றிப் படங்களை விநியோகித்தும் வருகிறது.

    அடுத்து இந்த நிறுவனம் விநியோகத்துக்காக வாங்கவிருக்கும் படம் ரஜினியின் லிங்காதான்.

    ஈராஸ்

    ஈராஸ்

    இந்தப் படத்தின் அனைத்து மொழி மற்றும் உலகளாவிய வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் ரூ 165 கோடிக்குப் பெற்றது. ஆடியோ மற்றும் தொலைக்காட்சி உரிமையைும் இந்த நிறுவனத்தின் வசமே கொடுக்கப்பட்டுவிட்டது.

    தமிழகம் மற்றும் கேரளா

    தமிழகம் மற்றும் கேரளா

    ஈராஸிடமிருந்து லிங்காவின் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் விநியோக உரிமையை வேந்தர் மூவீஸ் விலை பேசி வருகிறது.

    ரூ 77 கோடி...

    ரூ 77 கோடி...

    இதுவரை நடந்த பேச்சுகளின்படி, லிங்காவுக்கு ரூ 77 கோடிகள் வரை தர வேந்தர் தயாராக உள்ளதாகவும், ஆனால் ஈராஸ் தரப்பு மேலும் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

    இன்று முடிந்துவிடும்

    இன்று முடிந்துவிடும்

    லிங்கா விநியோகம் குறித்த வேந்தர் மூவீஸ் - ஈராஸ் இடையிலான பேச்சு வார்த்தை இன்று முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

    தெலுங்கு

    தெலுங்கு

    லிங்காவின் தெலுங்கு உரிமை மட்டும் ரூ 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு விற்கப்பட்ட முதல் படம் லிங்காதான்.

    English summary
    According to reliable sources, Vendhar Movies trying to get the Tamil Nadu and Kerala distribution rights of Rajini's Lingaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X