Exclusive: நடிக்க சொல்லிக் கொடுக்குறது வேஸ்ட்.. என்ன ஜமா பட இயக்குநர் இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் ஏராளமான சிறிய பட்ஜெட் படங்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. அவற்றில் சில படங்கள் அதிகமான கவனத்தையும் வரவேற்பையும் வசூலையும் குவித்திருந்தன. அந்த வகையில் லப்பர் பந்து, பைரி, ஜமா உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.
வித்தியாசமான கதை சொல்லலில் இந்தப் படங்கள் அதிகமான வரவேற்பை பெற்ற நிலையில், தங்கலான் உள்ளிட்ட பெரிய இயக்குநர்களின் படங்களும் இந்த வரிசையில் இணைந்துக் கொண்டன. பீரியட் படமாக வெளியான தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்திருந்த நிலையில், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்களை தாண்டி அர்ஜுன் உள்ளிட்டவர்கள் தங்களது நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தனர்.

விடைபெறும் 2024: 2024ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில், 2025ம் ஆண்டை வரவேற்க நாம் அனைவரும் தயாராகிவிட்டோம். வழக்கம் போல New year resolution உள்ளிட்ட அனைத்தும் நம்முடைய கிட்டியில் தயாராகவே உள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் 2025ம் ஆண்டு மிகச்சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூட்டிங்கில், போஸ்ட் புரொடக்ஷனில் உள்ள படங்கள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன. அப்படி ஒவ்வொரு படங்களாக வெளியாகி 2025ம் ஆண்டை மிகச்சிறப்பாக அமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நம்பிக்கை கொடுத்த 2024: 2024ம் ஆண்டும் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது என்று கூறலாம். அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான அதிகமான படங்களின்மூலம் தமிழ் சினிமாவிற்கு அதிகமான இயக்குநர்களும் நம்பிக்கை கொடுக்கும்வகையிலான நடிகர்களும் கிடைத்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான ஜமா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் பாரி இளவழகன், தங்கலான் படத்தின் அர்ஜுன், லப்பர் பந்து நடிகர் ஜென்சன் திவாகர், பைரி படத்தின் சையத் மஜீத் உள்ளிட்டவர்கள் தங்களது நடிப்பின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இந்த 2024ம் ஆண்டில் நம்பிக்கையை கொடுத்துள்ளனர்.
Actors Round table 2024: இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நட்புரீதியாக சரியான புரிதலுடன் உள்ள நிலையில் இவர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்து Actors Round tableலில் பிலிமிபீட் இணைத்திருந்தது. இவர்கள் அனைவரும் தங்களது நடிப்பு அனுபவத்தை பகிர்ந்த நிலையில், அது மட்டுமில்லாமல் ஒருவரின் திறமையை மற்றவர் புகழ்ந்ததை பார்க்கும்போது கொள்ளை அழகாக இருந்தது. இத்ந 2024ம் ஆண்டின் சிறப்பான Findingஆக தான் தங்கலான் நடிகர் அர்ஜுனை பார்ப்பதாக ஜென்சன் திவாகர் கூறினார். முதன் முதலில் தான்தான் அவரின் நடிப்பை சமூக வலைதளத்தில் பாராட்டி பேசியதாகவும் தெரிவித்திருந்தார். அவருக்கு இன்னும் அதிகமான வரவேற்பு கிடைத்திருக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
கவனம் பெற்ற நடிகர்கள்: இதனிடையே, தான் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்கு எந்தவிதமான ஹோம் ஒர்க்கும் இல்லாமல்தான் போவேன் என்றும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சொல்லும் விஷயங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இயக்குநர் சொல்லும் அதிகமான விஷயங்கள் புரியாது என்றபோதிலும் அந்த கேரக்டருக்கு தேவையான விஷயங்களை அந்த இடத்தில் சென்றே தான் நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். குத்துமதிப்பாகவே தான் இந்த கேரக்டரை அணுகியதாகவும் கூறியுள்ளார். இதை ஆமோதித்த திவாகர், எதையும் யோசிக்காமல் சென்றால்தான் அந்த கேரக்டர் சிறப்பாக அமையும் என்றும் கூறினார்.
சொல்லிக் கொடுப்பது வேஸ்ட்: தொடர்ந்து பேசிய ஜமா இயக்குநர் பாரி, தான் தன்னுடைய படத்தில் யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை என்றும் அவர்கள் அனைவரும் திறமைவாய்ந்த நடிகர்கள் என்றவகையில் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது வேஸ்ட் என்றும் கூறினார். அப்படி சொல்லிக் கொடுத்தான் தன்னுடைய ஸ்டைல் மட்டுமே வெளிப்படும் என்றும் அவர்களின் ஒரிஜினாலிட்டி அங்கே மிஸ்ஸாகிவிடும் என்றும் அவர் மேலும் கூறினார். அப்படி சுதந்திரம் கொடுக்கும்போதுதான் அவர்களிடமிருந்து சிறப்பான விஷயங்கள் வெளிப்படும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











