Exclusive: சூப்பர் ஸ்டார் வாரிசுக்கு டார்கெட்.. இயக்குநருக்கு 100 கோடி சம்பளம்.. அதிரவைத்த சீக்ரெட்

சென்னை: கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் வாரிசுகள் இடையேயான மோதல் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக அல்லு அர்ஜுன் - ராம் சரண் இடையேயான மோதல் பற்றி செய்யாறு பாலு பகிர்ந்துள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன.

புஷ்பா 2 இயக்குநருக்கு 100 கோடி சம்பளம்
திரையுலகில் முன்பைவிட தற்போது வாரிசுகள் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. கோலிவுட்டை விடவும் தெலுங்கு திரையுலகில் இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதாக சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு பல தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக அல்லு அர்ஜுன் - ராம் சரண் இடையேயான மோதல் டோலிவுட்டையே அதிர வைத்துள்ளதாம்.

 Exclusive: Allu Arjun paid 100 crores to Pushpa 2 director Sukumar

தெலுங்கு திரையுலகை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருவது நான்கு குடும்பங்கள் தான். சிரஞ்சீவி, பவன் கல்யாண் சகோதரர்கள் ஒருபக்கம், பிரபாஸ் குடும்பம், நாகர்ஜுனா குடும்பம், அல்லு அர்ஜுன் என இந்த 4 குடும்பத்தினர் தான் பல ஆண்டுகளாக டோலிவுட்டை கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக செய்யாறு பாலு கூறியுள்ளார். அல்லு அர்ஜுனின் தாத்தா அல்லு ராமலிங்கா ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

அதேபோல், அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக அல்லு அர்ஜுனின் வளர்ச்சி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆலா வைகுந்தபுரமுலோ படத்தைத் தொடர்ந்து புஷ்பா தி ரைஸ் அல்லு அர்ஜுனுக்கு செம்ம கம்பேக் கொடுத்தது. பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா தி ரைஸ், 500 கோடி வரை வசூலித்தது.

இதனால் அதிர்ச்சியான சிரஞ்சீவி, தனது மகன் ராம் சரணை வளர்த்துவிட வேண்டும் என அதிகம் ரிஸ்க் எடுத்து வருகிறாராம். அதனால் தான் ராம் சரணின் 15வது படத்தை இயக்க ஷங்கரை அழைத்துள்ளார் சிரஞ்சீவி. அதன்படியே கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இதற்கு போட்டியாகவே புஷ்பா 2ம் பாகம் பிரம்மாண்டமாக வர வேண்டும் என அல்லு அர்ஜுன் பிளான் செய்துள்ளாராம்.

புஷ்பா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் தரமாக இருக்க வேண்டும் என்பதால், இயக்குநர் சுகுமாருக்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக பேசியிருக்கிறார்களாம். அதாவது புஷ்பா இயக்குநர் சுகுமாருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக ராஜமெளலி 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

அவரை அடுத்து புஷ்பா 2 இயக்குநர் சுகுமார் தான் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக செய்யாறு பாலு கூறியுள்ளார். டோலிவுட் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் குடும்பத்தில் அவரது தம்பி பவன் கல்யாண், ராம் சாரண், ராணா உட்பட இன்னும் சில ஹீரோக்கள் உள்ளனர். அவர்களுக்கு அல்லு அர்ஜுனின் வளர்ச்சி தான் இப்போதைக்கு தலை வலியாக இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X