அடேங்கப்பா.. பிக் பாஸ் சீசன் 5 வீடு எப்படி இருக்கு பாருங்க.. இத்தனை சேஞ்ச் ஓவர் பண்ணியிருக்காங்களே!
சென்னை: பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பிச்சாச்சுங்க.. நள்ளிரவு முழுக்க பிக் பாஸ் கிராண்ட் லான்ச் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இந்த முறை அதிக மர வேலைப்பாடுகள் பிக் பாஸ் வீட்டில் இருப்பதை காண முடிகிறது.
இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் பிக் பாஸ் வீடு எப்படி இருக்குன்னு பார்த்துருப்பீங்க.. இந்த சீசன் பிக் பாஸ் வீடு எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம்.

கமலுக்கு முன்னாடி பார்ப்போம்
ஒவ்வொரு ஆண்டும் கமல் சார் தான் பிக் பாஸ் வீட்டை ரசிகர்களுக்கு சுற்றிக் காட்டுவார். இந்நிலையில், அவருக்கு கொஞ்சம் முன்னாடி நாம பிக் பாஸ் வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு வருவோம். இந்த சீசனில் என்னவெல்லாம் புதிய டிசைன்களை கொண்டு பிக் பாஸ் வீடு உருவாகி இருக்கிறது என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

என்ட்ரன்ஸே இப்படியா
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை வித்தியாசமான செட்டப் போடு பிக் பாஸ் வீடு உருவாக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டின் பிரதான நுழைவு வாயில் பிக் பாஸ் சீசன் 5ஐ குறிக்கும் விதத்தில் 5ம் நம்பர் வடிவத்தோடே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீச்சல் குளத்தையே மூடிட்டாங்க
கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீச்சல் குளத்தின் மீது வலை போட்டு வைத்திருந்த நிலையில், இந்த சீசன் பாதி நீச்சல் குளத்தையே மூடி அதற்கு மேல் சில சேர்களையும் போட்டு நீச்சல் குளம் இருந்த இடத்தை சின்ன கார்டன் போலவே மாற்றி உள்ளனர்.

சைக்கிள் டிசைன்
பாத்ரூம் ஏரியாவில் மிகப்பெரிய சைக்கிள் செட்டப் செம அழகாக போடப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இந்த சைக்கிள் செட்டப் முன்பாகத் தான் தினமும் பல் துலக்கவும் முகம் கழுவவும் போகின்றனர். சைக்கிள் செட்டப் ரொம்பவே க்ரியேட்டிவ் ஆக உள்ளது.

எங்கு நோக்கினும் 5
பிக் பாஸ் சீசன் 5ஐ ரசிகர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக எங்கே பார்த்தாலும் 5 அச்சிடப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டின் நுழைவு வாயிலில் தொடங்கி டைனிங் டேபிள், தலையணை, கால் மிதி என பல இடங்களில் 5ம் நம்பரை காண முடிகிறது.

பீனிக்ஸ் பறவை
கடந்த சீசனில் ஜல்லிக்கட்டு மாடு இருந்தது போல இந்த சீசனில் பீனிக்ஸ் பறவை செட்டப் கண்ணை பறிக்கிறது. எரிந்து விழுந்தாலும் எழுந்து வருவேன் என யாருக்கோ மறைமுகமாக சொல்வதை போலவே இந்த செட்டப் இருக்கே என்று தான் எண்ணத் தூண்டுகிறது.

கன்ஃபெஷன் ரூமிலும் பீனிக்ஸ்
போன சீசன் கன்ஃபெஷன் ரூம் பேய் பங்களா மாதிரி இருந்த நிலையில், இந்த சீசன் கன்ஃபெஷன் ரூம் பச்சை பசேலென பளீச்சென உள்ளது. அந்த இடத்தில் ஒருவருக்கு பதில் இருவர் தாராளமாக அமர்வது போல உள்ள நிலையில், இந்த முறை இருவர் இருவராக கன்ஃபெஷன் அறைக்கு செல்வார்களா? என்ன பிளான் வச்சிருக்காங்கன்னு பார்ப்போம். அங்கேயும் பீனிக்ஸ் பறவை சிறகுகள் உள்ளன.

பெரிய டைனிங் ஹால்
இந்த முறை 16 போட்டியாளர்கள் அல்ல ஆரம்பத்திலேயே 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் நுழைய உள்ளனர். அவர்கள் அமர்ந்து சாப்பிட, சண்டை போட ஏற்ற இடமான டைனிங் ஹால் மிகவும் பிரம்மாண்டமாகவே உள்ளது.

பெட்ரூம் எப்படி
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு பெட்ரூம்கள் உள்ளன. படுக்கையறையில் உள்ள போர்வைகளிலும் 5ம் நம்பரை அச்சிட்டு கேமரா எங்கே திரும்பினாலும் ரசிகர்களுக்கு இது 5வது சீசன் என்பதை அடிக்கடி உணர்த்தும் என்பது மட்டும் தெளிவாகி உள்ளது.

சமையல் அறை
ப்ரீத்தி நிறுவன விளம்பரத்துடன் இரண்டு கேஸ் அடுப்புகள் உள்ள சமையல் அறை போன சீசனில் இருந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் வருபவர்கள் யாருக்கெல்லாம் சமைக்க தெரிகிறது தெரியாது என்பதையும் தொடர்ந்து வரும் பண்டிகை நாட்களில் என்ன என்ன பொங்கல் கிண்டும் போட்டிகள் இங்கே நடக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

கேமராக்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பிடித்ததே அதன் ரியாலிட்டி தான். இங்குள்ள அத்தனை கேமராக்கள் மட்டுமே போட்டியாளர்களை கண்காணித்து வருகின்றன. அதனால், அவர்கள் ஸ்க்ரிப்ட் எழுதி நடிக்காமல் அவர்களுடைய உள்ளுணர்வுகளுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை பொருத்து கன்டென்ட்டை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். யார் எங்கே நின்று புரணி பேசினாலும், சூழ்ச்சி செய்தாலும், நாடகமாடினாலும் கேமரா காட்டி கொடுத்து விடும் பாஸ்!


Click it and Unblock the Notifications











