Leo vs Jailer: என் பையனே என்னை திட்றான்.. திடீரென அந்தர் பல்டி அடித்த மீசை ராஜேந்திரன்.. என்னாச்சு?
சென்னை: லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முந்தாது என்றும் முந்தினால் தனது மீசையை எடுப்பதாகவும் மீசை ராஜேந்திரன் சவால் விட்டு இருந்த நிலையில், தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த லேட்டஸ்ட் பேட்டியில் அந்தர் பல்டி அடித்து பேசியிருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். 2022ம் ஆண்டு விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை நடத்தின.
இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு தொடங்கி தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் மாவீரன், உதயநிதியின் மாமன்னன், பொன்னியின் செல்வன் 2, ரஜினிகாந்தின் ஜெயிலர் என வசூல் வேட்டை தொடர்ந்து வரும் நிலையில், அடுத்து விஜய்யின் லியோ படம் பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீசையை எடுக்கிறேன்: ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நடிகர் மீசை ராஜேந்திரன் சூப்பர்ஸ்டார் சர்ச்சை காரணமாக யூடியூப் சேனலில் பேசிய போது விஜய்யின் லியோ திரைப்படம் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து விட்டால் தனது மீசையை எடுப்பதாக அதிரடியாக சவால் விட்டு இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகா வாங்கி பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் படம் ஓடினாலும் நல்லது தான்: ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், 3 லட்சம் குடும்பம் வாழ்ந்ததாக கூறுகின்றனர். அதே போல விஜய் சார் நடித்த லியோ படமும் நல்ல கலெக்ஷன் செய்து 3 லட்சம் குடும்பத்தை வாழ வைத்தால் சந்தோஷம் தான் என பேசியுள்ளார்.

என் பையனே திட்றான்: முன்னதாக கெத்தாக பேசிய மீசை ராஜேந்திரன் தற்போது லியோ படத்தின் ஹைப் மற்றும் அதன் வீச்சை பார்த்து பேக் அடித்து விட்டாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். டாக்டரான தனது மகனே விஜய் ரசிகர் தான் என்றும் ஏன்ப்பா இப்படி விஜய்க்கு எதிரா பேசி வரீங்க என அவனே கேட்கிறான் என்றும் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
அது மட்டும் தப்பு தான்: ஆனால், ரஜினிகாந்த் உடன் விஜய்யை ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் பேசுவதும், ரஜினியை மட்டம் தட்டி விட்டு விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுக்க வேண்டும் என நினைப்பது தப்பு தான். விஜய் தனது ரசிஅக்ர்களை அந்த விஷயத்தில் கண்டிக்க வேண்டும் என்றும் லியோ படத்திற்கு பல படங்கள் போட்டியாக உள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிப்பதும் சந்தேகம் தான் என தனது கருத்திலும் உறுதியாக உள்ளார் மீசை ராஜேந்திரன்.


Click it and Unblock the Notifications











