twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சீரியல்ல முத்தக்காட்சியில் நடிச்சா என்ன தப்பு?' - 'மாப்பிள்ளை' ஜனனி பேட்டி! #Exclusive

    நயன்தாராவோடு நடித்தது நான் இல்லைஎன முத்தக்காட்சி புகழ் 'மாப்பிள்ளை' ஜனனி பேட்டி

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 'மாப்பிள்ளை' சீரியலில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஜனனி.

    முதல் சீரியல் எனத் தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    'மாப்பிள்ளை' சீரியல் முடிவடைந்ததை அடுத்து ஜீ தமிழ் டி.வி-யில் சீரியலில் நடித்து வருகிறார். சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கும் ஜனனியிடம் பேசினோம்.

    சீரியல் நடிகை வாழ்க்கை எப்படியிருக்கு..?

    சீரியல் நடிகை வாழ்க்கை எப்படியிருக்கு..?

    விஜய் டி.வி-யில் நான் நடிச்ச 'மாப்பிள்ளை' சீரியல் மூலம்தான் அறிமுகமானேன். முதல் சீரியல்லேயே இவ்வளவு பெரிய ரீச் கிடைச்சது அதிர்ஷ்டம்தான். மாப்பிள்ளை சீரியல் முடிஞ்சதுக்கு அப்புறம் 'ஜீ தமிழ்' சேனல்ல இப்போ ஒரு சீரியல் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு சீரியலுக்கு கேட்டிருக்காங்க. அந்த சீரியல்கள் இன்னும் கன்ஃபார்ம் ஆகல. போர் அடிக்காம பிஸியா வொர்க் போய்கிட்ருக்கு.

    ஜனனி..?

    ஜனனி..?

    கோயம்புத்தூர்தான் என் சொந்த ஊர். அப்பா ஸ்கூல் ட்ரான்ஸ்போர்ட் மேனேஜர். அம்மா காஸ்ட்யூம் டிசைனர். படிக்கும்போதே பார்ட் டைமா ஆங்கரிங் வொர்க், மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். போன வருசம் 'மாப்பிள்ளை' சீரியல்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. ஒரு சீரியல் முடிச்சிட்டு இப்போ அடுத்த சீரியல்ல நெகட்டிவ் கேரக்டர்ல பண்ணிட்டு இருக்கேன். இந்த கேரக்டர்லேயும் என்னோட நடிப்பு பேசப்படுது.

    சின்ன வயசுலேயே சினிமா ஃபீல்டுனு முடிவு பண்ணியாச்சா?

    சின்ன வயசுலேயே சினிமா ஃபீல்டுனு முடிவு பண்ணியாச்சா?

    சின்ன வயசுலேர்ந்து டாக்டர் ஆகணும்ங்கிறதுதான் என்னோட கனவு. அதுக்காக நல்லா படிப்பேன். +2-வில் இங்கே சீட் கிடைக்கிற அளவுக்கு மார்க் வரலை. அமெரிக்காவில் படிக்க சான்ஸ் கிடைச்சது. ஆனா, வீட்டுல என்னை அவ்ளோ தூரம் அனுப்ப யாரும் சம்மதிக்கலை. படிச்சா டாக்டர்தான் வேற எதுவும் படிக்கமாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம்பிடிச்சேன். அப்புறம், ஃபேமிலி டாக்டர்கிட்ட பேசவெச்சு வற்புறுத்தி இங்கேயே வேற கோர்ஸ் படிக்க சம்மதிக்க வெச்சாங்க.

    மீடியா தொடர்பா படிச்சீங்களா?

    மீடியா தொடர்பா படிச்சீங்களா?

    இங்கே படிச்சா நான் விரும்புறதை தான் படிப்பேன்னு சொன்னேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. கோயம்புத்தூரில் பயோ கெமிஸ்ட்ரி படிச்சேன். படிக்கும்போதே பார்ட் டைமா ஆங்கரிங் பண்ணினேன். படிச்சு முடிச்சதும் ஒரு எம்.என்.சி கம்பெனியில் வேலை கிடைச்சது. ஒரு வருசம் அங்க வேலை பார்த்தேன். ஆனா, அந்த சூழல் எனக்குப் பிடிச்சமாதிரி இல்லை. மீடியாவுக்கு போகலாம்னு எண்ணம் வந்துச்சு. சென்னையில் ஆங்கரிங் பண்றதுக்கு சான்ஸ் தேடினேன். அப்போதான், சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க.

    மாடலிங், சீரியல் நடிக்கிறதுக்கும் வித்தியாசம் உணரலையா?

    மாடலிங், சீரியல் நடிக்கிறதுக்கும் வித்தியாசம் உணரலையா?

    மாடலிங்ல இருந்திருந்தாலும் சீரியல் ஆக்டிங் டோட்டலா புதுசு. விளம்பரங்கள்ல நடிக்கிறப்போ சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் மட்டும்தான் காட்டவேண்டியிருக்கும். சின்ன டயலாக் இருக்கும் அவ்ளோதான். ஆனா, சீரியலில் நீளமான டயலாக் பேசவேண்டியிருக்கும் முகத்தில் அவ்வளவு உணர்ச்சிகளைக் காட்டவேண்டியிருக்கும்னு ரொம்ப பயந்தேன். நான் பயந்தது மாதிரி இல்லாம இப்போ நல்லாவே பெர்ஃபார்ம் பண்றேன்னு நினைக்கிறேன்.

    சினிமாவில் வாய்ப்பு கிடைச்சிருக்கா?

    சினிமாவில் வாய்ப்பு கிடைச்சிருக்கா?

    இப்போ விஷ்ணு ஹீரோவா நடிக்கிற 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்துல ஹீரோயினுக்கு ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். சமுத்திரக்கனி சார் நடிக்கிற 'ஏமாளி' படத்தில் அதுல்யா ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். இனிமே சின்ன ரோல்கள்ல நடிக்கவேணாம்னு முடிவு பண்ணியிருக்கேன். சினிமாவோ சீரியலோ நல்ல கேரக்டரா தேர்ந்தெடுத்து பண்ணனும். சினிமாவில் லீட் ரோல்ல வாய்ப்பு கிடைச்சாதான் பண்ணுவேன்.

    'நண்பேன்டா' படத்தில் நயன்தாரா கூட நடிச்சதா..?

    'நண்பேன்டா' படத்தில் நயன்தாரா கூட நடிச்சதா..?

    'நண்பேண்டா' படத்தில் நயன்தாரா கூட நடிச்சது நான் இல்லங்க. வேற ஒருத்தவங்க. அவங்க லைட்டா என்னை மாதிரியே இருக்கிறதால நான்தான் அந்த கேரக்டரில் நடிச்சதா எழுதிட்டாங்க. அந்தப் படத்தில் நடிச்சது நான் இல்ல. இப்போ ரெண்டு படத்தில் தான் நடிச்சிருக்கேன். இந்தப் படங்கள் வந்ததுக்கு அப்புறம் ஹீரோயின் ஃப்ரெண்டா நடிச்சேன்னு எழுதிக்கோங்க.

     நடிப்பு தவிர வேறு எதில் ஆர்வம்?

    நடிப்பு தவிர வேறு எதில் ஆர்வம்?

    நான் மேக்கப் ஆர்டிஸ்ட் கோர்ஸ் முடிச்சிருக்கேன். ஃபேஷன் டிசைனிங்ல இன்ட்ரெஸ்ட் இருக்கு. அம்மா காஸ்ட்யூம் டிசைனரா இருக்காங்க. ப்ரைடல் மேக்கப், காஸ்ட்யூம் டிசைனிங் பண்ணிட்டு இருக்காங்க. என் ஐடியா படி இப்போ அந்த பிஸினஸை ஆன்லைன் மூலமா பண்ணிட்டு இருக்காங்க. அம்மாவுக்கு அப்பப்போ சஜ்ஜென்ஸ் சொல்லுவேன். நடிப்புக்கு அப்புறம் ஃபேஷன் டிஸைனிங்ல கவனம் செலுத்தலாம்னு ஒரு ஐடியா இருக்கு. அம்மாவும், நானும் சேர்ந்து அந்த பிஸினஸ்ல ஜெயிக்கணும்.

     சீரியல்ல முத்தக் காட்சியில் நடிச்சிருக்கீங்களாமே..?

    சீரியல்ல முத்தக் காட்சியில் நடிச்சிருக்கீங்களாமே..?

    ஆமா, சீரியல் ஆக்டர் கமல் கூட நடிச்ச அந்த முத்தக்காட்சியைப் பத்திதான் எல்லோரும் கேக்குறாங்க. சினிமாவுல சகஜமா வர்ற முத்தக்காட்சிகள் இப்போ சீரியல்லேயும் வந்துக்கிட்டு இருக்கு. அன்னிக்கு ஷூட்ல இந்த சீன் இருக்குனே டயலாக் ஷீட் வாங்கும்போதுதான் தெரியும். இது வேணாமேனு சொல்லிப் பார்த்தேன். காட்சிக்குத் தேவைப்படுதுன்னு சொன்னாங்க. சரி ஓகே ன்னு சொல்லி நடிச்சுக் கொடுத்தாச்சு. இதுல என்ன தப்பு இருக்கு..?

    English summary
    Serial actress 'Mappillai' Janani, who showed her the best actress in her first serial, made a stir in acted kiss scene. An interview with Janani who is currently entering the cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X