For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Exclusive: தளபதி படத்தில நடிக்கணும்னா ஸ்க்ரிப்ட் கூட கேட்கமாட்டேன்.. இவன் தான் உத்தமன் நடிகை சாரா!

  |

  சென்னை: பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை சாரா வெங்கடேஷ் நடிகர் மகத்தின் 'இவன் தான் உத்தமன்' படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

  தமிழ் மற்றும் கன்னடம் என பைலிங்குவல் படமாக இந்த த்ரில்லர் படம் உருவாகி உள்ளது.

  மதியாஸ் போவுடன் டேட்டிங் செல்ல இதுதான் காரணம்.. பாய் ஃபிரண்ட் குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி!மதியாஸ் போவுடன் டேட்டிங் செல்ல இதுதான் காரணம்.. பாய் ஃபிரண்ட் குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி!

  சினிமா மீது இருந்த மோகம் காரணமாக தனது ஐடி வேலையை தூக்கி எறிந்து விட்டு வந்த சாரா வெங்கடேஷ் அளித்துள்ள பிரத்யேக பேட்டி இதோ..

  பெங்களூர் பொண்ணு

  பெங்களூர் பொண்ணு

  1995ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி கர்நாடகாவின் பெங்களூருவில் வெங்கடேஷ் மற்றும் கெளரி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் சாரா வெங்கடேஷ். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பு மற்றும் விளையாட்டில் டாப்பராக இருந்த சாரா விடிவி சிம்பு மாதிரி இன்ஜினியரிங் வேண்டாம் சினிமா தான் இனி என தனது ரூட்டை மாற்றிக் கொண்டதாக கூறியுள்ளார்.

  அவுட்சைடர்

  அவுட்சைடர்

  பாலிவுட் முதல் கோலிவுட் வரை வாரிசு நடிகர்கள் பிரச்சனை உள்ள நிலையில், சினிமா பேக்ரவுண்ட் ஏதுமின்றி ஒரு அவுட்சைடராக சின்ன வயதில் இருந்தே சினிமா மோகம் காரணமாக சினிமாவுக்குள் காலடி வைத்துள்ளார் சாரா வெங்கடேஷ். முதல் படமே இரு மொழி படமாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம் எனக் கூறியுள்ளார்.

  WOMEN POLICE படும் கஷ்டத்த சொல்லிருக்கோம் | VADHAM WEB SERIES TEAM TALK|FILMIBEAT TAMIL
  செயின்ட் மார்க்ஸ் ரோடு

  செயின்ட் மார்க்ஸ் ரோடு

  கன்னடத்தில் செயின்ட் மார்க்ஸ் ரோடு எனும் பெயரிலும் தமிழில் இவன் தான் உத்தமன் எனும் பெயரிலும் இந்த படம் உருவாகி உள்ளது. தமிழுக்கு தனியாகவும், கன்னடத்திற்கு தனியாகவும் இந்த படத்தை உருவாக்கினர். முதல் படத்திலேயே இரண்டு படங்களில் நடித்த அனுபவத்தை பெற்றது மகிழ்ச்சி என்றார் சாரா வெங்கடேஷ்.

  மகத் எப்படி

  மகத் எப்படி

  அப்பாவான சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மகத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த நடிகை சாரா வெங்கடேஷ். மகத் ரொம்ப ‘குட்' நல்ல மனிதர். நிறைய விஷயங்களை செட்டில் எனக்கு கற்றுக் கொடுத்தார். மேலும், பிரியங்கா உபேந்திரா மேடம், யாஷிகா ஆனந்த், மாகாபா ஆனந்த், மனோபாலா உள்ளிட்டோருடன் இந்த படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவத்தை எனக்கு கொடுத்தது என்றார்.

  தளபதி படம்னா உடனே ஓகே

  தளபதி படம்னா உடனே ஓகே

  தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்கிற கேள்விக்கு, கோலிவுட்டை பொறுத்தவரையில் ஏகப்பட்ட ஜாம்பவான்கள் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா என பெரிய பவர் ஹவுஸே இருக்கு.. எல்லாரையும் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் ஒருத்தர் படம்னா கதை கூட கேட்காம நடிப்பேன்னா அது தளபதி படம் மட்டும் தான் என புன்னகையுடன் கூறினார்.

  நயன்தாரா

  நயன்தாரா

  ஹீரோக்களில் பெரிய லிஸ்ட் போட்ட சாண்டில்வுட் சந்தனக் கட்டை சாரா வெங்கடேஷ், பிடித்த ஹீரோயின் யார் என்கிற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்காமல் நயன்தாரா தான் என நச்சென சொல்லி விட்டார். அவருடைய நடிப்பு போல்டனஸ், ஸ்க்ரீன் பிரெசன்ஸ் எல்லாமே வேற லெவல் என்று பாராட்டியுள்ளார்.

  கிளாமருக்கு நோ

  கிளாமருக்கு நோ

  ஜஸ்ட் லூசு பொண்ணு கேரக்டர் மற்றும் கிளாமர் ஷோ கேர்ளாக நடிக்க எனக்கு விருப்பமே இல்லை. அதற்காக இந்த துறையை நான் தேர்வு செய்யவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன அங்கீகாரம் கிடைத்தாலே எனக்கு போதும் என கிளாமருக்கு பிக் 'நோ' சொல்லி உள்ளார்.

  டோலிவுட்டில்

  டோலிவுட்டில்

  கன்னடம் மற்றும் தமிழில் அறிமுகமாகவுள்ள இவன் தான் உத்தமன் நடிகை சாரா வெங்கடேஷ் கூடிய சீக்கிரமே டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்க உள்ளாராம். ஆனால், அந்த படம் குறித்த மற்ற விபரங்களை இப்போதைக்கு சொல்ல முடியாது, அதற்கான நேரம் வரும் போது நிச்சயம் சொல்கிறேன் எனக் கூறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது பேட்டியை முடித்துக் கொண்டார். சாராவுக்கு இனி எல்லாமே சக்சஸ் ஆக வாழ்த்துக்கள்!

  English summary
  Ivan Than Uthaman actress Sara Venkatesh Interview and she shares about her experience in her debut movie and upcoming project also.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X