பிக் பாஸ் அபிராமி, சாக்ஷி எல்லாம் அவ்ளோ அழகா தெரிய இவரும் ஒரு காரணம்.. அரவிந்த் கண்ணன் பேட்டி!
சென்னை: இந்த லாக்டவுன் காலத்திலும் பல பிரபல நடிகைகள் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகின்றனர்.
நடிகைகளின் போட்டோக்கள் வைரலாகும் அளவுக்கு அந்த புகைப்படங்களை எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள் பிரபலமாகின்றனரா என்றால் அது நிச்சயம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
சினிமா பிரபலங்களை தனது லென்ஸ் வழியாக அழகாக காட்டும் இளம் புகைப்படக் கலைஞர் அரவிந்த் கண்ணனின் பிரத்யேக பேட்டி இதோ..

அது ஒரு விபத்து
சிறு வயது முதலே புகைப்படக் கலைஞராக வேண்டும் என்பது தான் உங்களின் விருப்பமா என்கிற கேள்விக்கு, அது ஒரு விபத்து என கூலாக பதில் சொல்லி தனது கதையை ஆரம்பித்தார் அரவிந்த் கண்ணன். தமிழ் மீடியத்தில் படித்து டிப்ளோமாவில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்த அரவிந்த் கண்ணன் நிச்சயம் செலிபிரிட்டி போட்டோகிராபர் ஆனது நிச்சயம் ஒரு விபத்து தானே என்றார்.

அற்புத கேமரா
எனக்கு நல்லா டிராவல் பண்ண பிடிக்கும். அப்படி சுற்றித் திரியும் போது புகைப்படங்களை எடுக்க ஒரு DSLR கேமரா வாங்கினேன். அந்த அற்புத கேமரா தான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக அதன் லென்ஸ்களுக்குள் ஈர்த்துக் கொண்டு புகைப்படக் கலைஞராக மாற்றியது என்றார்.

பர்ஸ் காலி
டிப்ளோமோ முடித்து விட்டு இன்ஜினியரிங்கும் படித்தேன். ஆனால், அதில் எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை. என்ன வேலை செய்யப் போகிறோம், என்ன ஆகப் போகிறோம் என எந்தவொரு எதிர்கால சிந்தனையும் இல்லாமல் சுற்றித் திரிந்த நிலையில், என் பர்ஸ் திடீரென காலியாகி விட்டது. அப்போதான் சம்பாதிக்க வேண்டுமே என புகைப்படங்களை எடுக்க தொடங்கினேன் என புன்னகைத்தார்.

செலிபிரிட்டி போட்டோகிராபர்
செலிபிரிட்டி போட்டோகிராபர் ஆக வேண்டும் என்பது என் ஆசையே கிடையாது. செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும், புகைப்படம் எடுக்கும் கலையை கொஞ்சமாவது ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற எனது முனைப்பையும் ஆர்வத்தையும் பார்த்து சில பிரபலங்கள் தங்களையும் போட்டோக்களை எடுக்க வாய்ப்பு கொடுத்தனர். அப்படி கிடைத்த பட்டம் தான் இந்த செலிபிரிட்டி போட்டோகிராபர் என்பது என்றார்.

பிக் பாஸ் பிரபலங்கள்
பிக் பாஸ் பிரபலங்களான அபிராமி, சாக்ஷி அகர்வால் மற்றும் இளம் நடிகைகளான தர்ஷா குப்தா, திவ்யா கணேஷ், ஆஷா பார்த்தலோம், சன் மியூசிக் விஜே சத்யா தேவராஜன், இவன் தான் உத்தமன் நடிகை சாரா வெங்கடேஷ் நடிகர் ரியாஸ் உள்ளிட்ட பல செலிபிரிட்டிகளை சமீபத்தில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் லட்சக் கணக்கில் லைக்குகளை குவிக்க இவர் தான் முக்கியக் காரணம் என்றே சொல்லலாம். வளர்ந்து வரும் புகைப்படக் கலைஞரான அரவிந்த் கண்ணனுக்கு மேலும் பல வாய்ப்புகள் குவிய வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











