ரைசா வில்சனின் இந்த ரீசன்ட் அழகுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இவர் தான்.. வைரலாகும் பிக்ஸ்!

சென்னை: பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

மாடல் அழகியாக விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

ரீசன்ட்டாக மெர்மெய்ட் லுக்கில் கடற்கரையில் அவர் நடத்திய அட்டகாசமான போட்டோஷூட்டுக்கு அழகு சேர்த்த மேக்கப் கலைஞர் ஹேமலதாவின் பேட்டி உங்களுக்காக..

கடல் கன்னியாக

கடல் கன்னியாக

மெர்மெயிட் எனும் கடல் கன்னி போல கிளிட்டர் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து சமூக வலைதளங்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் நடிகை ரைசா வில்சன். சமீபத்தில் தவறான சிகிச்சையின் மூலம் தனது அழகான முகம் வீங்கிப் போய் விகாரம் ஆனதால் ரொம்பவே உடைந்து போய்விட்டார்.

கவர்ச்சி கம்பேக்

கவர்ச்சி கம்பேக்

ஆனால், எதற்குமே கலங்காத நடிகை ரைசா வில்சன் குதிரையை போல விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து விட்டார். வீங்கிய தனது முகங்களை சரி செய்து கொண்டு உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை அணிந்து பட்டன்களை போடாமல் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை அதிர வைத்தார்.

அழகின் ரகசியம்

அழகின் ரகசியம்

கடற்கரையின் கடல் தேவதை போல ரைசா வில்சன் தற்போது மின்ன காரணமான செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஹேமலதா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ரைசா வில்சனின் சூப்பரான குழந்தைத்தனமான உள்ளம் குறித்தும் அவருக்கு மேக்கப் போட்ட அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட்

செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட்

சென்னையை சேர்ந்த ஹேமலதா எனும் அழகு கலை நிபுணர் இளம் நடிகைகளின் வைரல் போட்டோஷூட்களுக்கு மேக்கப் போட்டு அவர்களின் அழகுக்கு அழகுக்கூட்டி அலங்கரித்து அசத்தி வருகிறார். நடிகை ரைசா வில்சனின் ரீசன்ட் வைரல் போட்டோஷூட்டுக்கு பின்னால் இருக்கும் ரகசியமும் இவர் தான்.

வேணாம்னு சொன்னாங்க

வேணாம்னு சொன்னாங்க

ரைசா வில்சனுக்காக மேக்கப் போடுறீங்க, அவங்க முகமெல்லாம் வீங்கிப் போய் இருக்குதே, போகாதீங்கன்னு சொன்னாங்க.. ஆனால், பழையபடியே அதே அழகுடன் அசத்தலாக இருந்த ரைசா வில்சன் ஒரு நடிகையை போல எந்தவொரு பந்தாவும் இல்லாமால் ஒரு தோழி போல மிகவும் எளிமையாக நடந்து கொண்டதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் என்றார்.

இளம் நடிகைகளுக்கு

இளம் நடிகைகளுக்கு

நடிகை சாக்‌ஷி அகர்வால், ஷாலு ஷம்மு, பார்வதி நாயர் என பல இளம் நடிகைகளுக்கும் இது போன்ற போட்டோஷூட் சமயங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறேன். பிரைடல் மேக்கப் தான் என் முதற்கட்ட வேலை. பல போராட்டங்களுக்கு பின்பு தான் வீட்டிலேயே பார்லரை ஆரம்பித்தேன் என தனது வாழ்க்கை போராட்டம் குறித்தும் கூறினார். ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கும் பின்னாடி கூட இத்தனை பேர் உழைப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X