Rajinikanth: ராஜாதி ராஜனாக மாறிய ரஜினிகாந்த்! .. பத்து பாகுபலிக்கு சமம்.. சும்மா சிங்கமா இருக்காரே!
சென்னை: நடிகர் அஜித் ராஜராஜசோழன் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வந்த நிலையில் , தற்போது நடிகர் ரஜினிகாந்த்தும் ராஜா கெட்டப்பில் இருக்கும் ஏஐ புகைப்படங்களை உங்களுக்காக பிரத்யேகமாக பிலிமிபீட்டே உருவாக்கி உள்ளது.
எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் ராஜா வேஷம் போட்டு பார்த்து ரசித்த ரசிகர்கள் சமீப காலமாக ராஜமெளலி இயக்கிய பாகுபலியை தான் வியந்து பார்த்து வருகின்றனர். தமிழில் இயக்குநர் மணிரத்னம் அதற்கு ஈடு செய்யும் விதமாக பொன்னியின் செல்வன் படத்தையும் சமீபத்தில் கொடுத்திருந்தார்.

கோச்சடையான் மட்டும் அப்படி இருந்தா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திலேயே ராஜா கெட்டப்பில் நடிக்க வேண்டி இருந்த நிலையில் அவரது உடல் நலன் அப்போது திடீரென நலிவடைந்த நிலையில், அந்தப் படத்தை லைவ் ஆக்சன் அனிமேஷன் படமாக உருவாக்கியிருந்தனர்.

இந்நிலையில், ராஜாவுக்கு ராஜா நான் டா.. எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை.. என பாடிய சூப்பர் ஸ்டாரை சோழர் குலத்து மாபெரும் அரசனாக சித்தரிக்கப்பட்டுள்ள ஏஐ புகைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ராஜாதி ராஜா ரஜினிகாந்த்: ராஜாவுக்கே உரிய கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி ஒரு கெட்டப்பில் ஒரு படத்தில் நடித்தால், அந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் தலைவர் 171 படத்தின் லுக் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்றும் இளமையான ரஜினிகாந்த் என ஏகப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் ஏஐ மேஜிக் மூலமாக அணிவகுத்து வருகின்றன. போகிற போக்கில் பார்த்தால், போட்டோக்களை தாண்டி படமே ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகி நம் கண்களுக்கு விருந்து படைக்க வந்து விடும் என்று தான் தெரிகிறது.

தாறுமாறு லுக்: ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் 170 படத்துக்கான ஷூட்டிங்கை தொடங்கி உள்ள ரஜினிகாந்த் திருவனந்தபுர ஷெட்யூலை முடித்து விட்டு தற்போது திருநெல்வேலியில் 3 நாட்களாக படப்பிடிப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களை சந்திப்பதும், ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுமாக இந்த வயதிலும் தமிழ் சினிமாவின் அரசனாகவே ரஜினிகாந்த் திகழ்ந்து வருவது எல்லாம் பல நடிகர்களும் கனவில் கூட நினைக்க முடியாத கொடுப்பனை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











