twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா இவரது விரல் நுனியில்.. 1931 - 2021 வரை வெளியான படங்களின் தகவல் களஞ்சியம் ஜானகிராமன் பேட்டி!

    |

    சென்னை: பிலிம் நியூஸ் ஆனந்தனை தொடர்ந்து சினிமா தகவல்களை சேர்த்து வைத்திருக்கும் சினிமா ஆர்வலர் ஜானகிராமனின் சுவாரஸ்ய பேட்டி வெளியாகி உள்ளது.

    கனவுத் தொழிற்சாலையாக இருக்கும் சினிமா பற்றிய தகவல்களை சேகரிக்க தனது வேலையையும் விட்டு விட்டு சினிமா என்சைக்ளோபீடியாவையே உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

    பண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!பண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!

    புத்தகங்களாகவும், ஆன்லைன் டேட்டாக்களாகவும் 1931ம் ஆண்டு முதல் தமிழ் படம் வந்ததில் இருந்து 2021ல் லேட்டஸ்ட்டாக ரிலீசான மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் வரை ஏகப்பட்ட டேட்டாவை வைத்துள்ளார்.

    சினிமா காதலன்

    சினிமா காதலன்

    உலகம் முழுவதும் மக்களை இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் கட்டிப் போட்டு அண்ணார்ந்து பார்க்க வைக்கும் ஆற்றல் படைத்தது சினிமா. பலர் பொழுதுபோக்குக்காகவும், சிலர் தொழிலாகவும் ஒரு சிலர் அதன் மேல் காதல் கொண்டும் சினிமாவை பார்த்து வருகின்றனர். அப்படியொரு சினிமா காதலராக ஜானகிராமன் திகழ்கிறார்.

    பேசும் படம் முதல்

    பேசும் படம் முதல்

    தமிழ் சினிமாவில் வசனமே இல்லாத முதல் பேசும் படமாக 1931ம் ஆண்டு வெளியான காளிதாஸ் படம் முதல் 2021ம் ஆண்டு வெளியான மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் வரை கிட்டத்தட்ட ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா படங்கள் குறித்த ஒட்டுமொத்த தகவலையும் திரட்டி வைத்துள்ளார் ஜானகிராமன்.

    சிவாஜி ரசிகர்

    சிவாஜி ரசிகர்

    சினிமா மீது ஆர்வம் கொண்ட அத்தனை தமிழ் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களாகவும் இருப்பார்கள். ஜானகிராமனும் தீவிர சிவாஜி ரசிகர் தான். சிவாஜி நடிப்பில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளதாகவும், அதில் சுமார் 10 படம் மட்டுமே தனக்கு காண கிடைக்கவில்லை என ஜானகிராமன் ஃபீல் பண்ணி பேசுவது கட்டாயம் சினிமா ரசிகர்கள் காண வேண்டிய காட்சி.

    புத்தகங்களாக வெளியிட

    புத்தகங்களாக வெளியிட

    சினிமா குறித்து Phd படிப்பவர்களுக்கு தனது ஆய்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியத்தையும் சுமார் 10 வால்யூம் கொண்ட புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அத்தனை படங்களின் டேட்டாக்களை ஆன்லைனிலும் பதிவேற்றி இளைஞர்கள் கைகளில் கிடைக்கவும் வழி வகை செய்து வருகிறேன் என ஜானகிராமன் பேசும் பேட்டியை நிச்சயம் பார்த்து ரசியுங்கள்!

    English summary
    Tamil Cinma Data Collector Janakiraman quit his job to search on Cinema details of first Tamil cinema to latest one.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X