சிகப்பு நிற ரோஜா டிசைன் உடையில் நயன்தாரா.. கழுத்தில் தாலி.. நெற்றியில் விக்னேஷ் சிவன் முத்தம்!
சென்னை: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது.
Recommended Video
டைட் செக்யூரிட்டி காரணமாக எந்தவொரு புகைப்படமும் இதுவரை கசியாமல் இருந்த நிலையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரத்யேக திருமண புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், மணமகள் நயன்தாரா சிகப்பு நிற ரோஜாக்களை அடுக்கியது போல டிசைன் செய்யப்பட்ட உடையிலும், மணமகன் விக்னேஷ் சிவன் ஜிப்பா ஸ்டைலில் ஆன உடையையும் அணிந்து கொண்டு மணமேடையை அலங்கரித்துள்ளார்.

பிரம்மாண்ட திருமணம்
தமிழ் சினிமாவில் சமீபத்தில் இப்படியொரு திருமணம் நடைபெற்றதாக தெரியவில்லை என திருமணத்தில் கலந்து கொண்ட பலரும் கூறி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, அனிருத், அட்லி உள்ளிட்ட பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

ஒரு லட்சம் பேருக்கு விருந்து
ஆதரவற்ற குழந்தைகள், வயது முதியவர்கள் என தமிழ்நாடு முழுவதும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு மிகப்பெரிய விருந்து இன்று நடைபெற்றது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு பல இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில், பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

சைவ உணவு தான்
பலாப்பழ பிரியாணி, மோர் குழம்பு, பாதாம் அல்வா என ஒட்டுமொத்தமாக சைவ உணவு தான் மெனுவாக இருந்ததாக வெளியான மெனு பட்டியல் மூலம் தகவல்கள் வெளியாகின. வியாழக்கிழமை சாய் பாபாவுக்கு விரதம் என்பதால் சைவ உணவையே போட்டு விட்டாரா நயன்தாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்து முறைப்படி சென்னையில் உள்ள 20 பெரிய கோயில்களின் சிவாச்சாரியர்களை அழைத்து திருமணத்தை நடத்திய நிலையில், அசைவ உணவை அவாய்டு செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

9ம் ஒன்றும் சேர்ந்தால் 10
இதுவரை எந்தவொரு புகைப்படமும் லீக் ஆகாத நிலையில், இயக்குநர் விக்னேஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவள் 9 நான் 1 இருவரும் இணைந்து 10 ஆனோம் என காலை 10 மணிக்கு திருமணம் நடைபெற்றதை குறிப்பிட்டு முதல் முறையாக பிரத்யேக திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சிகப்பு ரோஜா போல
நடிகை நயன்தாரா என்ன மாதிரியான பட்டுப் புடவையை திருமணத்துக்கு பயன்படுத்த உள்ளார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், சிகப்பு ரோஜாக்களை அடுக்கி வைத்தது போன்ற டிசைன் கொண்ட உடையில் மணமகளாக மேடையை அலங்கரித்துள்ளார். யாரடி நீ மோகினி படத்தில் சொல்வது போல சார்.. அவங்களுக்கு சிகப்பு தான் செட்டாகும் என்பது திருமணம் வரை தொடர்கிறது.

கழுத்தில் தாலி
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய நிலையில், கழுத்தில் மாங்கல்யம் தொங்கும் காட்சி இந்த புகைப்படத்தில் தெளிவாக இடம்பெற்றுள்ளது. மேலும், கணவனாக மாறியுள்ள காதலர் விக்னேஷ் சிவன் அன்பாக கொடுத்த நெற்றி முத்தமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











