நான் எப்படி உடம்பை குறைச்சேன் தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட சூப்பர் சீக்ரெட்!

சென்னை: கோலிவுட்டின் கிளாமர் குயின் யாஷிகா ஆனந்த் தனது உடல் எடையை குறைத்தது எப்படி என்கிற சீக்ரெட்டை இந்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

Recommended Video

YASHIKAவின் WEIGHT LOSS TIPS | ACTRESS YASHIKA AANNAND CHAT | FILMIBEAT TAMIL

நடிகர் ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள பயிற்சியாளராக அறிமுகமானார் யாஷிகா ஆனந்த்.

துருவங்கள் பதினாறு படத்தில் நல்ல ரோலில் நடித்திருந்த யாஷிகா ஆனந்துக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைத்தது.

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து

துருவங்கள் பதினாறு படத்தைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து, நோட்டா, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் என தொடர்ந்து கிளாமர் ரோல்களே கிடைத்து வந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தமிழில் டிஆர்பி கிங் நிகழ்ச்சியாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூடினர். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக அவர் பதிவிடும் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

யாஷிகாவின் பேட்டி

யாஷிகாவின் பேட்டி

கவர்ச்சிக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து விட்டு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடிக்க களமிறங்கி உள்ளார் யாஷிகா ஆனந்த். சல்பர் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.

சல்பர் டைட்டில் ஏன்?

இந்த படத்திற்கு சல்பர் என்கிற டைட்டில் ஏன் வைக்கப்பட்டது என்கிற கேள்விக்கு துப்பாக்கியின் தோட்டாவில் இருக்கும் மருந்து சல்பர் என்று அதிரடியான விளக்கத்தை கொடுக்கிறார் யாஷிகா ஆனந்த். இதற்கு மேல் படம் குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட முடியாது என்றும் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக இப்பவே மாறிவிட்டார்.

கடமை செய்

கடமை செய்

எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் எனும் படத்திலும் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார். அந்த படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளதாக முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் ரிவீல் செய்திருந்தார் யாஷிகா ஆனந்த். எஸ்.ஜே. சூர்யா செட்டில் இருந்தாலே ஒரே கலகலப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அந்த ரகசியம்

அந்த ரகசியம்

கொழு கொழுன்னு இருந்த யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் டோட்டலாக தனது உடல் எடையை குறைத்தார். தனது ஒல்லி பெல்லி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில், உடல் எடையை எப்படி குறைத்தேன் என்கிற ரகசியத்தை ரசிகர்களுக்காக ஷேர் செய்துள்ளார்.

நல்லா விளையாடுங்க

நல்லா விளையாடுங்க

பாட்மிண்டன் கேம் நல்லா விளையாடுங்க அது தான் எனக்கு 6 முதல் 7 கிலோ வரை எடை குறைக்க பெரிதும் உதவியது. இடுப்பின் எல்லா பகுதிக்கும் அந்த விளையாட்டு ஸ்ட்ரெட்ச் கொடுப்பதால் சீக்கிரமே பலன் கிடைக்கும் என்கிற சூப்பரான சீக்ரெட்டை அம்பலப்படுத்தி உள்ளார். போதுமான டயட்டும் அவசியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X