காலம் மாறிவிட்டது... புதுப்படங்களை இனி யூடியூப்பிலேயே பார்த்துவிடலாம்!

யூடியூப் இணையதளத்திற்காக நான்கு மொழிகளில் பிரத்யேகமாக திரைப்படம் ஒன்று உருவாகுகிறது.

சென்னை : இந்தியாவில் முதன் முறையாக யூடியூப் இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக திரைப்படம் ஒன்று உருவாகுகிறது.

சினிமாத்துறை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது.

Exclusive youtube movie in four languages

அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்சியாக யூடியூப் இணையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது நெக்ஸ்ட்ஜென் எனும் நிறுவனம். க்ரவுட் பன்டிங் எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது.

இதன் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த முயற்ச்சி குறித்து கூறுகையில் "யூடியூப் இணையதளம் இன்று திரையுலகில் முக்கிய பங்காற்றி வருகிறது. படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என ஒரு படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் யூடியூப் இணையதளத்தின் பங்கு அபாரமானது.

இது வரை எத்தனையோ படங்கள் யூடியூப் இணையதளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. அப்படங்கள் ஒன்று திரையரங்கு சிக்கலினாலோ, தணிக்கை பிரச்சனையாலோ அவ்வாறு வெளியாகியுள்ளன. ஆனால் இது வரை யூடியூப் வெளியீட்டிற்கென்று இந்தியாவில் படங்கள் தயாரிக்கப்பட்டதில்லை.

இதை பற்றி எனது நண்பர்களிடம் விவாதித்த போது யூடியூப் வெளியீட்டிற்க்கென்றே ஒரு படத்தினை பிரத்யேகமாக தயாரித்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. அவர்களும் இது ஒரு நல்ல முயற்சி என்றும் அதில் தயாரிப்பாளர்களாக தாங்களும் பங்குகொள்வதாக நம்பிக்கை தந்தனர். இதனை தொடர்ந்து இதற்கான கதை தேர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தற்போது இறுதி செய்து விட்டோம்.

Exclusive youtube movie in four languages

இப்படத்தினை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருக்கிறோம். இப்படம் முதன்மையாக யூடியூப் இணையதளத்தில் வெளியானாலும் இதர ஒடிடி எனப்படும் டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடும் முயற்ச்சியிலும் ஈடுபடவிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கும் இத்திரைப்படம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான இலக்கு" என அரவிந்த் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X