நடிகர் விஜய்: கோட் பட டிக்கெட் விற்பனையில் இப்படி செய்யக்கூடாது.. நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு!
சென்னை: நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகி இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். கோட் படத்தில் அதிகப்படியான பல சுவாரசியங்கள் உள்ளன. இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர்.
கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் 4வது சிங்கிள் வெளியானது. அது திரிஷா -விஜய் இணைந்து ஆட்டம் போட்டுள்ள பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் சோலோவாக டான்ஸ் செய்துள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் பட ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த படத்தை காண தயாராகி வருகின்றனர்/ படத்தின் அடுத்தடுத்து 4 சிங்கிள்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் லிரிக் வீடியோக்களாக வெளியாகி உள்ளன/ இன்றைய தினம் 4வது சிங்கிள் மட்ட வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இருந்தபோதிலும் இன்றைய தினம் விஜய் மற்றும் திரிஷா இணைந்து ஆட்டம் போட்டுள்ள படத்தின் பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டது. இதனால் இந்த பாடலுக்காக மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இன்றைய தினம் விஜய் சோலோவாக ஆட்டம் போட்ட பாடலே வெளியானது.
கோட் படத்தின் 4வது பாடல்: மட்ட பாடலில் விஜய்யின் பிரசன்ஸ் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.இந்த பாடல் தனக்கு இந்த படத்திலேயே மிகவும் பிடித்தமான பாடல் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகம் தெரிவித்து இருந்தார். கோட் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்தப் படத்தில் இன்னும் இரு பாடல்கள் மீதம் உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதில் ஒன்று ரீமிக்ஸ் பாடல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தன்னுடைய படங்களில் ரீமிக்ஸ் பாடலை இணைப்பது வெங்கட் பிரபு மற்றும் யுவனின் வழக்கமாக உள்ள நிலையில், கோட் படத்தின் ரீமிக்ஸ் பாடல் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
டிக்கெட் விற்பனை: கோட் படத்தின் ஆன்லைன் புக்கிங்குகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிகமாக டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். விஜய் படங்களின் டிக்கெட்டுகள் துவக்கத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கமாக உள்ளது. சில நேரங்களில் பிளாக்கிலும் டிக்கெட்டுகள் விற்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தலைமை முக்கியமான உத்தரவு ஒன்றை இன்றைய தினம் பிறப்பித்துள்ளது அதன்படி அதிகப்படியான டிக்கெட்டுகளை முன்னதாக வாங்கி விற்பனை செய்யக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகிகளுக்கு உத்தரவு: கோட் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது மற்றும் பிளாக்கில் விற்கப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் தலைமை நிர்வாகம் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் சாதாரண ரசிகர்களும் ஆன்லைனில் புக் செய்து படத்தை முதல் நாளிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











