ஜெனரேட்டர் வாங்க மானியம்: ஜெ.வுக்கு சினிமாக்காரர்கள் பாராட்டு
சென்னை: ஜெனரேட்டர் வாங்க பட்ஜெட்டில் மானியம் அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
26-3-2012 அன்று வெளியிடப்பட்ட ஏழை-எளிய மக்களின் வாட்டத்தை போக்கும் நிதி நிலை அறிக்கை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
தமிழக மக்களின் உயர்வு ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயல்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜெனரேட்டர் வாங்குவதற்கு மானியம் அளிப்பதாக அறிவித்திருப்பது, மின் கட்டுப்பாட்டை போக்கும் அவரின் உறுதியை காட்டுகிறது.
அந்த அறிவிப்பின்படி, ஜெனரேட்டர் வாங்குவதற்கான மானியத்தை தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கிடைக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











