டிங் டாங், மேட்டர் பண்ணிட்டோம்: இப்பத்தான் விஜய் சேதுபதி நீங்க ரொம்ப பயப்படணும்
Recommended Video

சென்னை: 96 அல்ல இந்த படத்திற்கு தான் நீங்கள் ரொம்ப பயப்பட வேண்டும் விஜய் சேதுபதி.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் டிங் டாங் ப்ரொமோ வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

எதிர்பார்ப்பு
96 படத்திற்கு கண்டமேனிக்கு எதிர்பார்ப்பு இருப்பதால் பயமாக இருப்பதாக விஜய் சேதுபதி முன்பு தெரிவித்தார். ஆனால் அந்த படத்தை விட சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தான் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

விஜய் சேதுபதி
ப்ரொமோ வீடியோவை வித்தியாசமாக வெளியிட்டுவிட்டதாக படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. ஆனால் அந்த வீடியோவை பார்த்துவிட்டு இதுவே இப்படின்னா படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.

மேட்டர்
ப்ரொமோ வீடியோவில் சமந்தா நாங்க மேட்டர் பண்ணிட்டோம் என்று சொல்வது, ஷில்பா டிங் டாங் என்று திரும்பத் திரும்ப கூறுவதை பார்த்தால் அது என்ன மேட்டர் என்பது புரிகிறது. படத்தை பார்த்தால் தான் அது உங்களுக்கும் தெரிந்துவிடும். ரசிகர்களின் ஆவலைத் தூண்டவே இப்படி ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ரிலீஸ்
சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ஏ சான்று கிடைத்துள்ளது. இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு வந்துவிட்டது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பினாலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால் இதற்காக தான் நீங்கள் பயப்பட வேண்டும் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











