விஜய் சேதுபதி வெளியிட்ட பஸ்ட் லுக்… எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படத்தின் பெயர்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி தமிழ் திரை துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக வும் தன்னை செதுக்கி கொள்பவர். இவர் தற்போது தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
வெறுமனே கதாநாயகனாக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் அனைத்துவித கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக நடிப்பவர் விஜய் சேதுபதி.

தெலுங்கிலும் வெற்றி கண்டவர்
தமிழில் பல வெற்றிப் படங்களைத் தந்த விஜய் சேதுபதி தெலுங்கு திரைத்துறையில் " Uppena " எனும் தெலுங்கு படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி தனது அசாத்திய நடிப்பால் ஆந்திர மக்களிடமும் கைதட்டல் வாங்கினார். " Uppena " படத்தின் வெற்றிக்கு பிறகு பல முன்னணி தெலுங்கு இயக்குனர்கள் விஜய்சேதுபதியை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் செய்ய, விஜய் சேதுபதி நிதானமாக நல்ல கதைகளை தேடி நடித்து வருகிறார்.

தெளிந்த அரசியல் சிந்தனை
திரைப்படங்களில் தனது பங்கு என்ன என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. அது போலவே அவரது சமூகம் சார்ந்த கருத்துக்களும் தெளிவானவை. தனது மனதுக்கு பட்டதை எந்த பயமுமின்றி பேசி வருபவர். சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பள்ளிக்கூடங்களில் சாதி நிறபேதம் இருக்கக் கூடாது என சொல்ல, அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விஜய் சேதுபதியின் பேச்சை பாராட்டியுள்ளார். அதோடு பல லட்சம் மக்களை போலவே தானும் விஜய் சேதுபதி ரசிகன் என்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி அவர் தைரியமாக பேசும் தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும் என புகழ்ந்துள்ளார்.

ரிலீசுக்கு தயாராக உள்ள காத்துவாக்குல இரண்டு காதல்
தற்போது விஜய்சேதுபதி நடித்து முடித்திருக்கும் படம் காத்துவாக்குல இரண்டு காதல். நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது மட்டுமில்லாமல் தியாகராஜன் குமாரராஜா இயக்கவிருக்கும் படம் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கும் படங்களில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

B.E. Bar ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் விஜய் சேதுபதியை தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அந்த படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சுரேஷ் ரவி கதாநாயகனாக நடிக்க இஷாரா நபி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை இயக்குபவர் RDM. படத்தைத் தயாரிப்பவர் Absolute Pictures. இவர்கள் இதற்கு முன்பு காவல்துறை உங்கள் நண்பன் எனும் படத்தை தயாரித்தவர்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











