தியேட்டர்ல போயி ட்ரெயிலரை என்ஜாய் பண்ணுங்க... நெல்சன் ட்வீட்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 13ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது பீஸ்ட் படம். இந்தப் படத்தை பீஸ்ட் திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாக உள்ளது.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பீஸ்ட். மாஸ்டர் படத்தைக் காட்டிலும் பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

பீஸ்ட் ட்ரெயிலர்
படத்தின் ஒவ்வொரு போஸ்டர்கள், இரண்டு பாடல்கள் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இதற்கென ரசிகர்கள் மிகவும் தீவிரமாக காத்திருக்கின்றனர். பலர் உடனடியாக ட்ரெயிலரை ட்ரெண்டிங் செய்யவும் காத்துள்ளனர்.

படத்தின் சிறப்பான பாடல்கள்
படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன. ரசிகர்கள் இந்தப் பாடல்களை கொண்டாடி வருகின்றனர். அரபிக்குத்து பாடல் 25 மில்லியனை தாண்டி சாதனை புரிந்து வருகிறது. இதேபோல ஜாலிலோ ஜிம்கானா பாடலும் பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து இந்தப் பாடல்களை ட்ரெண்டிங்கிலேயே வைத்துள்ளனர்.

திரையரங்குகளில் ட்ரெயிலர்
இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகிவுள்ள ட்ரெயிலர் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. இதனிடையே இந்த ட்ரெயிலரை அருகிலுள்ள திரையரங்குகளில் சென்று எக்ஸ்பீரியன்ஸ் செய்யுங்கள் என்று படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் காத்திருப்பு
இதையொட்டி நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள செல்ஃபி, மன்மதலீலை மற்றும் இடியட் ஆகிய படங்களின் இடைவேளையின்போது பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல திரையரங்குகளின் வெளியில் ரசிகர்கள் காத்திருந்து படத்தின் ட்ரெயிலரை திரையரங்கில் பார்க்க ஆர்வம் காட்டினர்.


Click it and Unblock the Notifications











