காஷ்மீர் அனுபவங்கள்... வீடியோ வெளியிட்ட நடிகை ஹன்சிகா
மும்பை : தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கலக்கி வருபவர் நடிகை ஹன்சிகா.
சமீபத்தில் இவரது அண்ணனின் திருமண வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
தற்போது லாக்டவுனுக்கு முன்னதாக தன்னுடைய குடும்பத்தினருடன் காஷ்மீர் சென்ற அனுபவத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

குட்டி குஷ்பூ
நடிகை ஹன்சிகா தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வருகிறார். சிறுவயதாக இருந்தபோதே இந்தியில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் குட்டி குஷ்பூ என்று பெயர் வாங்கிய இவர், சமீபத்தில் தன்னுடைய உடலை வெகுவாக குறைத்துள்ளார்.

கொண்டாட்ட பதிவு
சமீபத்தில் இவரது அண்ணனின் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த சங்கீத், மெகந்தி உள்ளிட்ட கோலாகலங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மணப்பெண்ணுக்கு இணையாக அவரது உடையலங்காரங்கள் காணப்பட்டன. லைக்குகளும் அள்ளின.

குடும்பத்தினருடன் பயணம்
இந்நிலையில் லாக்டவுன் காரணமாக குடும்பத்தினருடன் முடங்கியுள்ள ஹன்சிகா லாக்டவுனுக்கு முன்னதாக தன்னுடைய அம்மா மற்றும் சகோதரருடன் தான் சென்ற காஷ்மீர் பயணத்தின் வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். பனிபடர்ந்த காஷ்மீரில் வெள்ளை ரோஜாவாக காட்சியளிக்கிறார் ஹன்சிகா அந்த வீடியோவில்.

சுடச்சுட நூடுல்ஸ்
தால் ஏரி உள்ளிட்டவற்றை மிகவும் அழகாக படம்பிடித்துள்ளார். பனிகளின் நடுவில் குடும்பத்தினருடன் விளையாடி மகிழ்ந்துள்ளார் ஹன்சிகா. மேலும் குல்மார்க்கில் அவர் ஸ்கேட்டிங் செய்வது காரில் பயணம் மேற்கொள்வது, சுடச்சுட நூடுல்ஸ் சாப்பிடுவது என நமக்கும் உடனடியாக காஷ்மீர் செல்ல வேண்டும் என்ற ஆவலை அந்த வீடியோ ஏற்படுத்துகிறது. ஆனால் என்ன லாக்டவுனில் கனவு மட்டுமே நமக்கு வசப்படும்.


Click it and Unblock the Notifications











