எக்ஸ்ட்ராக்ஷன்.. தோர் நடிகரின் தரமான சம்பவம்.. பிரபல பாலிவுட் நடிகரும் மெர்சல் காட்டி இருக்காரு!
மும்பை: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள Extraction விரைவில் வெளியாகிறது.
நெட்பிளிக்ஸில் ரிலீசாகவுள்ள இந்த வெப் திரைப்படத்தில் தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும், பிரபல பாலிவுட் நடிகரான ரந்தீப் ஹூடா முக்கியமான கதாபாத்திரத்தில் தனது மெர்சலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சமீபத்தில் வெளியான Extraction டிரைலர் உலகளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
நெட்பிளிக்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியான மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸை தொடர்ந்து, அதிகம் எதிர்பார்க்கப்படும் நெட்பிளிக்ஸ் வெளியீடாக எக்ஸ்ட்ராக்ஷன் மாறி உள்ளது.
கொரோனா பாதிப்பால், உலகளவில் பல பெரிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாத நிலையில், தோர் நடிகரின் எக்ஸ்ட்ராக்ஷன் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
வரும் ஏப்ரல் 24ம் தேதி நெட்பிளிக்ஸில் எக்ஸ்ட்ராக்ஷன் ரிலீசாகிறது. அதற்கான புரொமோஷன் பணிகளை நெட்பிளிக்ஸ் தரப்பு தொடங்கி உள்ளது.
எக்ஸ்ட்ராக்ஷன் படத்தின் இந்தி டிரைலரை பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Randeep Hooda (@randeephooda) on
இந்த வெப் படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், எக்ஸ்ட்ராக்ஷன் ரிலீஸ் புரொமோஷனுக்காகவும் இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். ஆனால், கொரோனா லாக் டவுன் காரணமாக, அவரது பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











