லாக் டவுனிலும் அடங்காத தமிழ் ராக்கர்ஸ்.. வெளியான சில மணி நேரங்களிலேயே லீக்கான Extraction!

சென்னை: தோர், அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் திரைப்படம் Extraction.

மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸை தொடர்ந்து, நெட்பிளிக்ஸில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள எக்ஸ்ட்ராக்‌ஷனுக்கு உலகளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Extraction leaked in Tamil Rockers!

காமெடி காட்சிகள் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சாம் ஹார்க்ரேவ் இயக்கி உள்ளார்.

தோட்டாக்கள் தெறிக்க, கார்கள் பறக்க, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டும் ஃபுல் மீல்ஸ் கொடுத்திருக்கிறது இந்த எக்ஸ்ட்ராக்‌ஷன்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட எக்ஸ்ட்ராக்‌ஷனை சுடச் சுட திருடி தமிழ் ராக்கர்ஸ் தனது தளத்தில் வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக லாக் டவுன் அமலில் இருப்பதால், எந்தவொரு புதுப்படங்களும், வெளியாகாத நிலையில், தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் ஆக்‌ஷன் டிராமாவான எக்ஸ்ட்ராக்‌ஷனை ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர்.

Recommended Video

Varane Avashyamund | Dulquer Salman | Quarantine Movie Choice

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X