சுந்தர் சியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது... அஜித் பட இயக்குனர் நெகிழ்ச்சி !
சென்னை : நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக உள்ளது முகவரி.
இந்த படத்தை இயக்குனர் வி.இசட் துரை இயக்கி இருந்தார். அவர் கடைசியாக சுந்தர் சியின் இருட்டு படத்தை இயக்கியிருந்தார்.
இருட்டு வெற்றிக்கு பிறகு இப்போது மீண்டும் சுந்தர் சி உடன் இணைந்துள்ள புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பலரது ஃபேவரிட் படமாக
திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கட்டாயம் முகவரி திரைப்படம் மிகப்பெரிய உந்து கோலாக இருக்கும். அஜித் நடிப்பில் இயக்குனர் வி.இசட் துரை இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இன்றுவரை இப்படம் பலரது ஃபேவரிட் படமாக உள்ளது.

ஹாரர் கதை களத்தில்
இந்த நிலையில் இயக்குனர் வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர்சி முதல்முறையாக நடித்திருந்த இருட்டு திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளியது . காதல் மற்றும் த்ரில்லர் படங்களை இயக்கி வந்த வி.இசட் துரை முதன்முறையாக ஹாரர் கதை களத்தில் இயக்கிய இருட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பதாக பேச்சு அடிபட்டது.

ஹீரோவாக அறிமுகமான
அந்த வகையில் இருட்டு கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்ற சுந்தர்சி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தலைநகரம் திரைப்படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். தலைநகரம் கேங்ஸ்டர் திரைப்படமாக இருந்தாலும் இதில் வடிவேலுவின் காமெடிக்காகவே படம் பட்டையைக் கிளப்பியது. மேலும் இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் நாய் சேகர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

மீண்டும் சுந்தர் சியுடன்
இந்த நிலையில் வி.இசட் துரை, சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள புதிய படத்திற்கு தலைநகரம் 2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் இயக்குனரும் நடிகருமான ராஜ் கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இருட்டு படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர் சியுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என இயக்குனர் வி.இசட் துரை நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











