இந்த குழந்தைகள் சிம்புவை விட பயங்கரமாக நடித்துள்ளார்கள்: கார்த்தி

By Siva

Recommended Video

மேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி - வீடியோ

சென்னை: எழுமின் படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் சிம்புவை விட பயங்கரமாக நடித்துள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடித்துள்ள படம் எழுமின். இந்த படத்தில் ஆறு சிறுவர்கள் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷால், சிம்பு, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி கூறியதாவது,

கேமரா

கேமரா

ஸ்கிரீனில் குழந்தைகளுடைய இன்ட்ரோ பார்த்துக் கொண்டிருந்தேன். தற்போது எல்லாம் மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்த உடனேயே முதலில் கேமராவை காண்பிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சிம்பு

சிம்பு

சிம்புவை விட பயங்கரமாக பேசுகிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. சிம்பு சின்னப் பையனாக இருந்தபோது பேசியது நமக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. என்னப்பா இந்த பையன் இந்த போடு போடுகிறான் என்று. அதை எல்லாம் மிஞ்சியது போன்று இந்த சிறுவர்கள் இருக்கிறார்கள்.

பயம் இல்லை

பயம் இல்லை

இவர்கள் செல்ஃபி பிராண்ட் கிட்ஸ் என்பதால் கேமராவை பார்த்து எந்த பயமும் இல்லை. நான் கல்லூரி, பள்ளி விழாக்களுக்கு செல்கிறேன். அனைவரும் சினிமாவை நோக்கி தான் செல்கிறார்கள். சினிமா பாட்டு பாடுகிறார்கள், டான்ஸ் ஆடுகிறார்கள். அனைவரும் சினிமாவை நோக்கியே செல்வதாக தோன்றியது.

துணிச்சல்

துணிச்சல்

தற்காப்பு கலையை மையமாக வைத்து படம் எடுத்ததை மிகவும் பாராட்டுகிறேன். என் மகளை அழைத்துக் கொண்டு போய் இந்த படத்தை நிச்சயமாக காட்டுவேன்.

அடி

அடி

எவனாவது செயினை பறித்தால் அய்யய்யோ என்று பயப்படக் கூடாது, என் செயினையா பறிக்கிறாய் என்று அடிங்க. அப்படி பயப்படாமல் இருக்க தற்காப்பு கலை தான் உதவும். என் மகள் டேக்வாண்டோ வகுப்புக்கு சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இந்த படம் தேவை என்று தைரியமாக தயாரித்துள்ள விஜி அவர்களை வாழ்த்துகிறேன்.

நன்கொடை

நன்கொடை

இந்த தற்காப்பு கலை பள்ளிக்கு என் கையால் நன்கொடை கொடுக்க வைத்தார்கள். நான் என் சார்பில் ரூ. 50 ஆயிரம் நன்கொடை அளிக்கிறேன். பெரிய தொகை இல்லை தான். ஆனால் நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார் கார்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X