குழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்

காமெடி நடிகர் விவேக் நடிப்பில் உருவாகியுள்ள 'எழுமின்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: காமெடி நடிகர் விவேக் கதையின் நாயகனாக நடித்துள்ள எழுமின் படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின். நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு சிறுவர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இந்த படம், தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விளையாட்டு துறையில் நடக்கும் அரசியலையும் இப்படம் பேசுகிறது.

Ezhumin movie trailer launched

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி, விவேக், உதயா,அழகம்பெருமாள், நடிகை தேவயானி, இயக்குனர் விஜி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

நடிகர் சிம்பு டிரெய்லரை வெளியிட்டார். படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் விழா மேடையில் தற்காப்பு கலைகளை நிகழ்த்தி காட்டினர். நடிகர் விஷால் இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார். படக்குழு சார்பில் திருப்பத்தூர் வீரவிளையாட்டு கலைக் கூடத்துக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை நடிகர் கார்த்தி அவர்களிடம் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், தன் பங்களிப்பாக திருப்பத்தூர் வீரவிளையாட்டு கலைக் கூடத்துக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் சினிமாவை நோக்கி தான் பயணப்படுகிறார்கள். எந்த பள்ளி, கல்லூரி விழாவுக்கு சென்றாலும், சினிமா பாட்டு, டான்ஸ் தான்.

ஆனால் இன்று இயக்குனர் விஜி இந்த படத்தை எடுத்திருப்பது, அவசியம் என்று நினைக்கிறேன். இந்த படத்தை எனது மகளை அழைத்துச் சென்று காட்டுவேன். அவளும் மார்சியல் ஆர்ட்ஸ் பயில்கிறாள். இன்றைய சூழலுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியம். ஏனென்றால், ரோடில் போகும் போது, யாராவது செயினை பறித்துச் சென்றால், திருப்பி தாக்க வேண்டும். அதற்கான தன்னம்பிக்கையை தற்காப்பு கலை நமக்கு கொடுக்கும்"

இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.

படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் அனைவரும் உண்மையில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்கள். இசை வெளியீட்டுக்கு பின்னர் படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X