கேப்டன் ஜேக்ஸ்பேரோவாக விஷ்ணு விஷால்.. ரிஹானாவாக ஊர்வசி ரவுத்தேலா.. வீடியோ ஃபேஸ் ஆப்… இது வேற லெவல்!
சென்னை: ஆண்களை பெண்களாக மாற்றிய போட்டோ FaceApp டிரெண்டான நிலையில், தற்போது வீடியோ Face Changer App வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.
உங்க மூஞ்சியை அப்படியே எந்த வீடியோவிலும் பொருந்தும் படி ஒட்ட வச்சிக்கலாம்.
ஹாலிவுட் படத்தில் நீங்க நடிக்கமாலே ஸ்டன்ட் செய்யலாம். நடிகர் விஷ்ணு விஷால் முதல் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா வீடியோ வரை தற்போது இந்த மாயாஜால எடிட்டிங்கில் ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

முகத்தை மாற்றலாம்
சமீபத்தில் நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் எல்லாம் ஆண்களாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என FaceApp ஒன்று செம வைரலாக டிரெண்டானது. அதே போல பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் பெண்களாகவும் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின. நடிகைகள் கஸ்தூரி, குஷ்பு எல்லாம் தங்கள் புகைப்படங்களை தாங்களே ஃபேஸ் ஆப் செய்து பதிவிட்டு இருந்தனர்.
View this post on InstagramA post shared by FaceSwap (@faces.wap) on
இப்போ வீடியோவிலும்
போட்டோவில் பாலினத்தை மாற்றி எடிட் செய்யப்பட்ட நிலையில், தற்போது எந்த வீடியோவில் வேண்டுமானாலும் உங்களின் முகத்தை வைத்து, தத்ரூபமாக எடிட் செய்யும் அளவுக்கு Face Changer செயலி அப்கிரேட் ஆகி உள்ளது. சினிமா படங்களின் காட்சிகளில் இளைஞர்கள் தங்கள் முகங்களை வைத்து மாய வித்தை காட்டி வருகின்றனர்.
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) August 7, 2020
கேப்டன் ஜேக்ஸ்பேரோவாக
இந்நிலையில், ரசிகர் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷாலின் முகத்தை பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் ஹீரோ கேப்டன் ஜேக்ஸ்போரோவின் வீடியோவில் பக்காவாக பொருத்தியபடி எடிட் செய்யப்பட்ட Face Changer வீடியோவை அவருக்கு அனுப்பி உள்ளார். அதனை பார்த்த விஷ்ணு விஷால், சிரிக்கும் எமோஜிகளை போட்டு என்ஜாய் பண்ணி உள்ளார். காதலி ஜூவாலா கட்டாவும் வாவ் என வாயை பிளந்து கமெண்ட் செய்துள்ளார். மறக்காம வீடியோவை பார்த்துடுங்க..
View this post on InstagramA post shared by URVASHI RAUTELA 🇮🇳Actor🇮🇳 (@urvashirautela) on
ரிஹானாவாக மாறிய பாலிவுட் நடிகை
பிகினி புகைப்படங்களையும், டாப்லெஸ் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாராளமாக பதிவிட்டு வந்த நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 29 மில்லியன் ரசிகர்கள் சேர்ந்துள்ளதை கொண்டாடும் விதமாக Face Changer வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், பாடகி ரிஹானாவாக ஊர்வசி ரவுத்தேலா மாறியுள்ள கொடுமையை நீங்களே கண்டு ரசியுங்கள்.
View this post on InstagramA post shared by Anita H Reddy (@anitahassanandani) on
சாமுராய் ஹீரோயின்
சியான் விக்ரமின் சாமுராய், தளபதி விஜய்யின் சுக்ரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அனிதா, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில், ஹாலிவுட் பாடகி ஷகிரா போலவும், அவரது ஆண் நண்பர் டாம் க்ரூஸ் போலவும் எடிட் செய்யப்பட்டு இருக்கும் வீடியோவை பதிவிட்டு அசற வைத்துள்ளார்.

என்ன கொடுமை சரவணா
டெக்னாலஜியின் இந்த அசுர வளர்ச்சியில், இன்னும் என்ன என்ன கொடுமைகளை எல்லாம் பார்க்கப் போகிறோமோ, பிரச்சனைகளை சந்திக்கப் போகிறோமோ தெரியவில்லை. சாதாரண வீடியோக்களில் முகத்தை மாற்றுவது போல, பிரபல நடிகர்கள் முகங்களை ஆபாச படங்களில் மாற்றி அந்த வீடியோக்களையும் விஷமிகள் வெளியிடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications











