twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Fact Check: பாஜகவை விமர்சித்த வாஜ்பாயின் உறவுக்கார பெண்.. நக்மா ஷேர் செய்த வீடியோ தவறு!

    |

    டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவுக்கார பெண் ஒருவர் பாஜகவை விமர்சித்து பேசியுள்ளார் என நடிகை நக்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    ஆனால், உண்மை என்னவென்றால், அந்த வீடியோவில் இருப்பது வாஜ்பாயின் உறவுக்கார பெண்ணே அல்ல என்பது தான்.

    Fact Check: Nagma shares video, claims Vajpayee’s niece is criticising BJP

    முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்து, அடல்ஜியின் உறவுக்கார பெண், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டை இரண்டாக பிரிப்பதற்காகவே அவர்கள் பாடுபடுகின்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அவர்கள் ஒருபோதும் உருவாக்கி தர மாட்டார்கள், விவசாயிகள் பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு என எதை பற்றியும் கவலைப் பட மாட்டார்கள் என அந்த பெண் பேசியதை பகிர்ந்து பாஜகவை விமர்சித்துள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல பரவியது. ஆனால், நக்மா ஷேர் செய்த வீடியோவில் இருப்பது வாஜ்பாயின் உறவுக்கார பெண்ணான கருணா சுக்லா (Karuna Shukla) இல்லை என்றும், அந்த பெண் சமூக ஆர்வலர் அதியா ஆல்வி (Atiya Alvi) என்பதும் தெரியவந்துள்ளது.

    குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அவர் பேசிய வீடியோவின் ஒரிஜினல் கடந்த ஜனவரி 3, 2020ல் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இது கூட தெரியாமல் நக்மா ஷேர் செய்த வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் வைரலாக்கி உள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும், நக்மா குற்றம்சாட்டிய வாஜ்பாயின் உறவுக்கார பெண்ணான கருணா சுக்லா, பாஜகவில் இருந்து விலகி, கடந்த 2014ம் ஆண்டே காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The lady in the video is not Vajpayee's nice Karuna Shukla. The lady in the video is that of Atiya Alvi, who is a social activist.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X