ரத்தினவேலு கதாபாத்திரத்தை கொண்டாடிட்டாங்க.. அதை புரிஞ்சுக்கல.. ஃபகத் பாசில் ஓபன் டாக்
சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஃபகத் பாசில். ஆரம்பத்தில் சில கஷ்டங்களை பார்த்த அவர் இப்போது தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் திறமை கொண்ட ஃபகத் கடைசியாக ஆவேசம் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து 50 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இந்தச் சூழலில் மாமன்னன் படம் குறித்து ஃபகத் பாசில் பேசியிருக்கிறார்.
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் ஃபகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.

கண்களால் நடிப்பு: கண்களால் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்து வரும் நேரத்தில் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்
மாமன்னன்: வேலைக்காரன் படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்தார். அதனையடுத்து அவர் நடித்த மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தார். அதில் ரத்தினவேல் என்ற சாதி வெறி பிடித்த கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ஃபகத் பாசில். வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை அசால்ட்டாக உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து விட்டார்.
ரத்னவேலு: முக்கியமாக ஃபகத் பாசில் ஏற்றிருந்த ரத்தினவேல் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. அதிலும் மாமன்னன் இடைவேளை காட்சியில் வடிவேலுவைவிடவும் ஃபகத் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார். மேலும் லாலிடம் பேசும் காட்சியிலும், க்ளைமேக்ஸிலும் தனது நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தியிருந்தார். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் அந்தக் கதாபாத்திரத்தை ரசிகர்கள் பெரும்பாலும் வெறுத்தனர். அதேசமயம் தென் மாவட்டங்களில் ரத்தினவேலு கதாபாத்திரத்தை கொண்டாடவும் செய்தனர். இந்தச் சூழலில் அந்தக் கதாபாத்திரம் குறித்து ஃபகத் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
ஃபகத் பாசில் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துதான் நடிக்கிறேன். மாமன்னன் படத்தில் ரத்னவேல் கதாபாத்திரம் ஒரு ஆதிக்க சாதியை சேர்ந்தது. அவன் கெட்டவனாக இருக்கும் தருணமும், அவன் பலவீனமானவனாக இருக்கும் தருணமும் அதில் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அவனுடைய இருதன்மைகளையும் புரிந்துகொண்டு ரத்தினவேலை ஒரு மனிதனாக பார்த்தார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவனாக மட்டுமே பார்த்தது, கொண்டாடியது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாதது. அதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.
நாம் ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் எப்படியானது என்பது தெரிந்துதான் நடிக்கிறோம். மாமன்னன் படத்தில் ரத்தினவேலு கதாபாத்திரத்தில் ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவன் , அவன் கெட்டவனாக இருக்கும் தருணமும் இருக்கிறது. அதே நேரத்தில் அவன் பலவீனமானவனாக இருக்கும் தருணமும் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அவனுடைய இரு தன்மைகளையும் புரிந்துகொண்டு அவனை ஒரு மனிதனாக பார்த்தார்களா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் அவனை தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவனாக மட்டுமே பார்த்தது, அந்த கதாபாத்திரத்தை அப்படி கொண்டாடியது, என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. அதே நேரத்தில் அது என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. ஃபகத் பாசில் அடுத்ததாக தமிழில் வேட்டையன், மாரீசன் படங்களில் நடித்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











