புஷ்பா படத்தால் எந்தப் பயனும் இல்லை.. அவருக்காகத்தான் ஒத்துக்கொண்டேன்.. ஃபகத் பாசில் ஓபன் டாக்

சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஃபகத் பாசில். ஆரம்பத்தில் சில கஷ்டங்களை பார்த்த அவர் இப்போது தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் திறமை கொண்ட ஃபகத் கடைசியாக ஆவேசம் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்தச் சூழலில் அவர் புஷ்பா படம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் ஃபகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.

Fahad Faasil Open Talks about Pushpa Movie Character Here are the details

கண்களால் நடிப்பு: கண்களால் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்து வரும் நேரத்தில் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்

மாமன்னன்: வேலைக்காரன் படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்தார். அதனையடுத்து அவர் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தார். அதில் ரத்தினவேல் என்ற சாதி வெறி பிடித்த கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ஃபகத் பாசில். வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை அசால்ட்டாக உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து விட்டார்.

புஷ்பா: இதற்கிடையே அவர் புஷ்பா படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக உருவாகியிருக்கும் புஷ்பா 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார். இதிலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் புஷ்பா படம் குறித்து ஃபகத் பாசில் ஓபனாக பேசியிருக்கிறார்.

ஃபகத் பாசில் பேட்டி: அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், "புஷ்பா படம் என்னை பான் இந்தியா நடிகராக உயர்த்திக்கொள்ள உதவவில்லை. இதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை. அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு காரணமே இயக்குநர் சுகுமார்தான். அவர் மீதிருக்கும் அன்பால்தான் அதில் நடிக்க ஒத்துக்கொண்டேன். அந்தப் படத்துக்கு பிறகு என்னிடமிருந்து ரசிகர்கள் ஒரு மேஜிக்கை எதிர்பார்க்கிறார்கள். புஷ்பா என்னை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போகவெல்லாம் இல்லை. இதுகுறித்து நான் சுகுமாரிடமே பேசியிருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X