புஷ்பா புருஷன் யாருன்னு தெரியும்.. அல்லு அர்ஜுனின் புஷ்பா பட வில்லன் யாரு தெரியுமா?

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் மெயின் வில்லன் யார் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது.

கால்ஷீட் காரணமாக விஜய்சேதுபதி இடம்பெறாத நிலையில், தற்போது மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவரை அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக களமிறக்கி உள்ளனர்.

ஸ்டைலிஷ் ஸ்டார்

ஸ்டைலிஷ் ஸ்டார்

டோலிவுட் உலகின் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். பிரபாஸ், ராம் சரண் படங்கள் எல்லாம் பான் இந்தியா படமாக மாறிய நிலையில், அல்லு அர்ஜுன் தனது அடுத்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது.

அசுர வெற்றி

அசுர வெற்றி

கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ அசுர வெற்றி அடைந்த நிலையில், அல்லு அர்ஜுனுக்கும் இந்திய அளவில் ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படம் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

நேஷ்னல் க்ரஷ்

நேஷ்னல் க்ரஷ்

சமீபத்தில் நேஷ்னல் க்ரஷ் என பெயர் வாங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா தான் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என இவரும் கை வசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவிலே கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் ராஷ்மிகா.

வில்லன் விஜய்சேதுபதி

வில்லன் விஜய்சேதுபதி

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு இணையான நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கிய விஜய்சேதுபதி, பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய்சேதுபதிக்கு ஏகப்பட்ட மொழிகளில் இருந்து வில்லனாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமான நிலையில், கால்ஷீட் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார் விஜய்சேதுபதி.

மலையாள நடிகர்

மலையாள நடிகர்

இந்நிலையில், தற்போது புஷ்பா படத்திற்கு வில்லனாக நடிக்கப் போறது யார் என்கிற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரான்ஸ் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த நடிகர் ஃபகத் ஃபாசில் தான் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லன்

சிவகார்த்திகேயனுக்கு வில்லன்

மலையாள திரையுலகில் ஹீரோவாக நடித்து வரும் ஃபகத் ஃபாசில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் படத்தில் ஏற்கனவே வில்லனாக நடித்திருந்தார். பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பாட்டு படத்தில் நாயகனாக நடித்து வரும் ஃபகத் ஃபாசில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக மாறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X