புஷ்பா 2 மிரட்டல் லுக்கில் பகத் ஃபாசில்.. அவரே ஷேர் செய்த புதிய புகைப்படம்.. அடுத்த சம்பவம்!

சென்னை: புஷ்பா படத்தின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் பகத் ஃபாசில் கதாபாத்திரம் புஷ்பாவை ஒண்ணு குறையுது என சொல்லி பிராண்ட் பற்றி பேச வைத்து மெர்சல் ஆக்கிவிடும்.

முதல் பாகத்தின் முடிவில் பன்வர் சிங் சிக்காவத் கதாபாத்திரத்தை அரை நிர்வாணமாக்கி ஜட்டியோடு ஓட வைத்திருப்பார் புஷ்பா.

இந்நிலையில், இரண்டாம் பாதியில் புஷ்பாவை எப்படி பழிவாங்கப் போகிறார் பகத் ஃபாசில் என்பதை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

விஜய்சேதுபதி பண்ண வேண்டியது

விஜய்சேதுபதி பண்ண வேண்டியது

இந்தியளவில் கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் தான் ஈட்டியது என படக்குழுவினரே அறிவித்துள்ளனர். பகத் ஃபாசில் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் முன்னதாக விஜய்சேதுபதி நடிக்க வேண்டியது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக புஷ்பா படத்தில் இருந்து விலகி விட்டார் விஜய்சேதுபதி.

பிராண்ட்

பிராண்ட்

என் சட்டையில் ஒரு பிராண்ட் இருக்கு புஷ்பா சட்டையில் அது இல்லை என சொல்லும் ஆரம்ப காட்சியிலே அதிர வைக்கும் போலீஸ் அதிகாரியாக மிரட்டுகிறார் மொட்டை தலை பகத் ஃபாசில். அப்பன் பெயர் தெரியாத அனாதை புஷ்பா என்பதை சுட்டிக் காட்டுவதை புரிந்து கொண்டு அதற்கு பழிவாங்குவது போல அவரை அவமானப்படுத்தி அனுப்பும் விதமாக ஆடைகளை அவிழ்த்து விட்டு இப்போ போ உன் பிராண்ட் என்ன என்பது தெரியும் என புஷ்பா தி ரைஸ் கிளைமேக்ஸ் முடியும்.

புஷ்பா தி ரூல்

புஷ்பா தி ரூல்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் 350 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் திட்டத்துடன் தீவிரமாக உருவாகி வருகிறது.

மிரட்டும் மொட்டை

மிரட்டும் மொட்டை

இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கும் பகத் ஃபாசிலுக்கும் இடையே கடும் மோதல் இருக்கும் நிலையில், தற்போது புஷ்பா 2ம் பாகத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பகத் ஃபாசில். புஷ்பா தி ரைஸ் படத்தில் பகத் ஃபாசில் புஷ்பாவை கொன்றுவிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

என்ன கதை

என்ன கதை

செம்மரக் கடத்தல் கும்பலில் கூலிக்காரனாக வேலைக்கு சேர்ந்து ஒட்டுமொத்த செம்மரக் கடத்தல் கேங்கிற்கே தலைவனாகிறான் புஷ்பா. அவனுக்கு கேங்க்ஸ்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் வில்லன்களாக மாறும் நிலையில், அவர்களை எப்படி சமாளிக்கிறான் புஷ்பா என்பது தான் ஒட்டுமொத்த திரைக்கதை. ஆந்திராவில் நடைபெற்று வரும் செம்மரக் கடத்தல் கதையை செம ராவாக எடுத்து இருக்கிறார் இயக்குநர் சுகுமார். இரண்டாவது பாகம் இன்னமும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Pushpa Success Meet மேடையில் நடனமாடிய Senthil Rajeswari, DSP, Sunil Kumar
கமலின் விக்ரம் படத்திலும்

கமலின் விக்ரம் படத்திலும்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்திலும் பகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விக்ரம் படம் வெளியாக உள்ளது. தீபாவளிக்கு புஷ்பா 2 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு என தனது நடிப்பால் அசத்தி வருகிறார் பகத் ஃபாசில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X