Fahad Faasil-Vadivelu: மீண்டும் இணையும் மாமன்னன் வடிவேலு, ஃபஹத் பாசில்.. வெளியானது அபிஸியல் அப்டேட்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இதில் நடித்திருந்த வடிவேலு, ஃபஹத் பாசில் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகியுள்ள இந்த அப்டேட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் இணையும் மாமன்னன் காம்போ
இதுவரை காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு, மாமன்னன் திரைப்படத்தில் சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில் ஆகியோரும் வடிவேலுவுடன் லீட் ரோலில் நடித்திருந்தனர். பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியிருந்த மாமன்னன், வடிவேலுவின் கேரியரில் பெரிய கம்பேக் கொடுத்திருந்தது.

அதேபோல், வடிவேலு - ஃபஹத் பாசில் இருவருக்கும் இடையேயான காட்சிகளும் ரசிகர்களிடம் செம்மையாக ரீச் ஆகியிருந்தது. சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் மாமன்னன் படம் திரையிடப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் வடிவேலுவுக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. முன்னதாக மீண்டும் வடிவேலுவுடன் இணைவேன் என மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.
அதேபோல் ஃபஹத் பாசிலும் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது வடிவேலு, ஃபஹத் பாசில் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி வடிவேலுவும் ஃபஹத் பாசிலும் இணைந்து நடிக்கும் படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தின் 98வது படமாக இது உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு, ஃபஹத் பாசில் லீடிங் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தை, வி கிருஷ்ண மூர்த்தி இயக்கவுள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகியுள்ளார். ஏடிஎம் கார்டு டிசைனில் இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதேநேரம் மாமன்னன் போல சீரியஸ்ஸான மூவியாக இல்லாமல், ட்ராவல் ஜானரில் முழுக்க முழுக்க காமெடி மூவியாக உருவாகவுள்ளதாம்.
வடிவேலு, ஃபஹத் பாசில் இணையும் படத்தின் அப்டேட், புத்தாண்டு ஸ்பெஷலாக அதிரி புதிரியாக வெளியாகியுள்ளது. மாமன்னனுக்குப் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு மீண்டும் ஃபஹத் பாசிலுடன் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், டைட்டில், ரிலீஸ் தேதி உள்ளிட்ட அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











