தமிழ், தெலுங்கை தொடர்ந்து பாலிவுட்டிலும் களமிறங்கும் ஃபகத் பாசில்?.. செம ஃபார்ம் போங்க

திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் பகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். ஃபாசில் இயக்கத்தில் கையெத்தும் தூரத் படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு ஆரம்பத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம்வருகிறார். தயாரிப்பாளராகவும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் ஃபகத் பாசில்.

இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் கண்கள், உடல் மொழி என அனைத்திலும் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்துவருகிறார்கள். ஆனால் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.இதன் காரணமாக மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

Fahad Faasil AR Murugadoss Salman Khan

மோகன் லாலுக்கு அடுத்து: இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன் லால். அவருக்கென்று தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் எக்கச்சக்க பேர் இருக்கிறார்கள். மோகன் லால் தமிழில் இருவர் படத்தில் நடித்தார். அதில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தாலும் படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. அதேபோல் மம்மூட்டியும் தமிழில் தளபதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவருக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மோகன் லால், மம்மூட்டியைவிடவும் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் மலையாள நடிகர் என்றால் அவர் ஃபகத் பாசில்தான்.

காரணம் என்ன: அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஃபகத்தின் அலட்டல் இல்லாத நடிப்பு. மோகன் லால், மம்மூட்டி ஆகியோரிடமும் அது இருந்தாலும் அவர்களைவிடவும் ஃபகத்தை தமிழ்நாட்டில் ஒருபடி மேலே ரசிக்கிறார்கள். உதாரணமாக அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான மாமன்னன் படத்தை எடுத்துக்கொண்டால் புரிந்துகொள்ளலாம். அந்தப் படத்தின் இடைவேளை காட்சியில் ஃபகத்தின் நடிப்பு அசுரத்தனமாக இருக்கும். முக்கியமாக வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை அசால்ட்டாக உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து விட்டார்.

இதற்கு முன்னதாக தமிழில் அவர் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அந்தப் படங்களில் நடித்தபோதே அவர் பிரபலம்தான். ஆனாலும் மாமன்னன் படம் தமிழில் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்துவிட்டது. குறிப்பாக அந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகு சமூக வலைதளங்கள் முழுக்க ஃபகத் பாசிலே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுகூட அவர் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அவர் என்ன மாதிரியான அதகளம் செய்யப்போகிறார் என்பதுதான் ஆவலாக இருக்கிறது.

பாலிவுட்டில் ஃபகத் பாசில்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் புஷ்பா படத்திலும் நடித்தார் அவர். அடுத்ததாக அவரது நடிப்பில் புஷ்பா 2 படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ஃபகத் பாசில் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் சிக்கந்தர் படத்தில் ஃபகத் பாசிலை முக்கியமான ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும்; அந்த பேச்சுவார்த்தையில் ஃபகத் ஓகே சொல்லிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X