தலைவருடன் ஃபகத் ஃபாசில்.. ஃபேட்டோவிலேயே மிரட்டும் அமிதாப் பச்சன்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: ஜெயிலர் படம் கொடுத்த தாறுமாறான வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம் வேட்டையன். இயக்குநராக தனது முதல் படமான ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் சூழலிலேயே அதிர்வை ஏற்படுத்திய இயக்குநர் தா.செ. ஞானவேல் வேட்டையன் படத்தையும் இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது படமான வேட்டையன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகர் பட்டியலில் இருக்கக்கூடிய பகத் பாசில், பாகுபலி படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ராணா, அவ்வளவுதான் முடங்கி விடுவார் என நினைத்துக் கொண்டிருக்கையில் ஹவ் வோல்டு ஆர் யூ என்ற படத்தின் மூலம் பிரம்மாண்டமான கம் பேக் கொடுத்த மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான புகைப்படங்களும் செய்திகளும் அண்மையில் வெளியானது. குறிப்பாக படத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் படத்தின் டப்பிங் பணிகள் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தது.
ஃபகத் ஃபாசில் பிறந்த நாள்: இன்று அதாவது ஆகஸ்ட் 8ஆம் தேதி வேட்டையன் படத்தில் நடித்துள்ள மலையள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகாராக வளம் வரும் ஃபகத் ஃபாசிலுக்கு பிறந்த நாள். இவர் இன்று தனது 42வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு அவரது ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ஏற்கனவே ஃபகத் ஃபாசிலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தது.

ஃபகத் ஃபாசில் புகைப்படம்: இந்நிலையில், வேட்டையன் படத்தின் படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஃபகத் ஃபாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் வாழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் மூவரும் ரசிகர்களைக் கவரும் வகையில் உள்ளனர். மூவருமே நடிப்பில் ரசிகர்களைக் கட்டிப்போட்டுவிடும் தன்மை கொண்டவர்கள் என்பதால் இந்த புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

மஞ்சு வாரியர்: படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் கேரளாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது படம் குறித்து பேசினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களில் ஒரு தரப்பினரை கொஞ்சம் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார்: அதாவது வேட்டையன் படம் குறித்த கேள்விக்கு, " நான் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவியாக நடிக்கின்றேன். எனக்கு முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார் எனத் தெரியாது. நான் ஜெய் பீம் என்ற தரமான படத்தினை எடுத்த ஞானவேல் சாரின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன். எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜோடியாக நடிக்கின்றேன் என்பதை விடவும், ஞானவேல் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கின்றேன் என்ற பொறுப்பு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஜெய் பீம் படத்தினை எடுத்த ஞானவேல் படத்தில் நடிப்பதுதான் எனக்கு மனதில் ஓடிக்கொண்டு இருந்தது"எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











