»   »  தொப்பையுடன் பகத் பாசில்... அதிர்ச்சியான ரசிகர்கள் வயிற்றில் பால்வார்த்த வீடியோ!

தொப்பையுடன் பகத் பாசில்... அதிர்ச்சியான ரசிகர்கள் வயிற்றில் பால்வார்த்த வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தொப்பையுடன் பகத் பாசில்.

கொச்சின் : பஹத் பாசில் நடித்துள்ள விளம்பரம் ஒன்றின் மேக்கிங் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த விளம்பரத்தில் பஹத் பாசிலின் தோற்றம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரு சமையல் எண்ணெய் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் படத்தில் பஹத் பாசில் தொப்பை வயிறுடன் நடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். தொப்பை வயிறுக்காக செயற்கையாக ஒரு பொருளை வயிற்றில் வைத்து நடித்திருக்கிறார்.

Fahad fasil with a belly stomach?

மேலும் இந்த வீடியோவில் நுணுக்கமாக செய்யப்படும் மேக்கப்பிற்காக பஹத் பாசில் சில மணி நேரம் பொறுமையாக அமைதி காத்திருப்பதும் தெரிகிறது. குறிப்பிட்ட அந்த பிராண்ட் எண்ணெய்யை உபயோகப்படுத்தினால் தொப்பை குறையும் என்கிற கான்செப்ட்டை வைத்து இந்த விளம்பரப்படத்தை எடுத்துள்ளார்கள்.

முகம் குண்டாகக் காட்டப்படுவதற்காக முகம் முழுக்க மறைக்கப்பட்டு மேக்கப் செய்யப்பட்டிருக்கிறது. உடல் பருமன் கொண்டவரைப் போல இருக்கும் பஹத்தின் தோற்றத்தை சில புகைப்படங்களில் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் இந்த வீடியோ பார்த்து தெளிவாகி இருக்கிறார்கள்.

English summary
Making video of a advertisement acted by Fahad faazil is now viral on social media. In this cooking oil advertisement, Fahad faazil has acted with a belly stomach.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil