அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் வில்லன் லுக் வெளியானது; மொட்டை தலையுடன் மிரட்டும் பகத் ஃபாசில்!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வரும் பகத் ஃபாசிலின் மொட்டை தலை லுக் போஸ்டர் மற்றும் அவரது கதாபாத்திர பெயர் வெளியாகி உள்ளது.
விஜய்சேதுபதியை போல ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி வருகிறார் நடிகர் பகத் ஃபாசில்.
விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருந்த புஷ்பா படத்தில் அவர் விலகிய நிலையில், பகத் ஃபாசிலை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா
அலா வைகுந்தபுறமுலோ படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அடுத்த படியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு மலையாளம், இந்தி என இந்த படம் பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

இரண்டு பாகங்கள்
கேஜிஎஃப் படத்தை போலவே இந்த படமும் இரண்டு பாகங்களாக வெளியாகின்றன. முதல் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், வில்லன் பகத் ஃபாசிலின் கேரக்டர் போஸ்டரை புஷ்பா படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

புஷ்பா வில்லன்
புஷ்பா புருஷன் என்கிற வார்த்தை எப்படி பிரபலமானதோ அதே போல புஷ்பா வில்லன் வார்த்தையும் பிரபலமாகிவிடும் போல தெரிகிறது. மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோவான பகத் ஃபாசில் இந்த படத்தில் பன்வார் சிங் ஷேகாவாத் ஐபிஎஸ் அதிகாரியாக புஷ்பா எனும் புஷ்பராஜுக்கு தொல்லைக் கொடுக்க காத்திருக்கிறார்.

மொட்டை தலை
மொட்டை தலையுடன் மிரட்டல் லுக்கில் நடிகர் பகத் ஃபாசில் இருக்கும் புதிய போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகிறது. அல்லு அர்ஜுன் மற்றும் பகத் ஃபாசில் ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக ஷேர் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

கமல் படத்திலும்
நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பகத் ஃபாசில் நடித்து வருகிறார். புஷ்பாவுக்கு நோ சொன்ன விஜய்சேதுபதியும் பகத்துடன் இணைந்து நடித்து வரும் விக்ரம் படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

பாட்டு என்ன ஆச்சு?
நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பாட்டு எனும் படத்தில் பகத் ஃபாசில் மற்றும் நயன்தாரா நடிக்கப் போவதாக அல்போன்ஸ் புத்திரன் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால், அதற்கு அடுத்து அந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நஸ்ரியா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது. மேலும், பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளனர் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பாட்டு படம் குறித்த தெளிவான அறிவிப்பை இன்னமும் அல்போன்ஸ் புத்திரன் வெளியிடவில்லை.

மலையன் குஞ்சு
மாலிக் படத்தைத் தொடர்ந்து பகத் ஃபாசில் நடித்து வரும் 'மலையன் குஞ்சு' எனும் மலையாள படத்திலும் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். அந்த படத்தை இயக்குநர் சஜிமோன் இயக்கி வருகிறார். வில்லனாக ஒரு பக்கம் மிரட்டினாலும் மலையாளத்தில் எப்போதுமே ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருவதை பகத் ஃபாசில் தவிர்க்காமல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











