Fahadh Faasil Birthday: ஹேப்பி பர்த்டே ரத்னவேலு.. மீண்டும் அலப்பறையை ஆரம்பித்த பகத் ஃபாசில் ஆர்மி

சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் ஃபாசில் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மலையாள சினிமாவை தாண்டி தமிழில் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்து மெர்சல் காட்டி வரும் பகத் ஃபாசிலை கோலிவுட் ரசிகர்கள் வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர்.

1982ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ஆலப்புழாவில் பிறந்த பகத் ஃபாசில் இன்று தனது 41வது பிறந்தநாளை தனது மனைவி நஸ்ரியா மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார்.

Fahadh Faasil birthday today and fans again trending Maamannan Rathnavel mashups

2002ல் வெளியான கையெட்டும் தூரத் படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமான பகத் ஃபாசில் 2017ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில்: முன் வழுக்கைத் தலையுடன் ஒருத்தர் சினிமாவில் ஹீரோவாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறியான விஷயமாக இருக்கும் போது தனது நடிப்பால் அதையெல்லாம் உடைத்து தகர்த்து மலையாளம், தமிழ் என தென்னிந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகராக கெத்துக் காட்டி வரும் பகத் ஃபாசில் பர்த்டேவை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் #HappyBirthdayFahadhFaasil என ஹாஷ்டேக் போட்டு தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Fahadh Faasil birthday today and fans again trending Maamannan Rathnavel mashups

நஸ்ரியாவுடன் திருமணம்: நேரம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில், பகத் ஃபாசிலுடன் இணைந்து பெங்களூர் டேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அப்போது ஏற்பட்ட காதல் காரணமாக 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்த டிரான்ஸ் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Fahadh Faasil birthday today and fans again trending Maamannan Rathnavel mashups

ரத்தினவேலாக கொண்டாடும் ரசிகர்கள்: கடந்த ஆண்டு விக்ரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக ஸ்பெஷல் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் அதிர வைத்த பகத் ஃபாசில் சமீபத்தில் வெளியான மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் ரத்தினவேல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சாதிய பெருமை பேசும் அந்த கதாபாத்திரத்தில் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தாலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவை புறம் தள்ளிவிட்டு ரசிகர்கள் பலரும் ரத்தினவேலை கொண்டாட ஆரம்பித்தனர். சில நாட்களாக அந்த அலை ஓய்ந்திருந்த நிலையில், பகத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மீண்டும் ரத்தினவேல் அலை அடிக்க ஆரம்பித்துள்ளது. ஹேப்பி பர்த்டே பகத் ஃபாசில் என்பதற்கு பதிலாக ஹேப்பி பர்த்டே ரத்தினவேல் என்றே ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X