Fahadh Faasil - மாமன்னனில் மிரட்டிய ஃபகத் பாசில்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Fahadh Faasil (ஃபகத் பாசில்) மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த ஃபகத் பாசில் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதால் இதுதான் தனது கடைசி படம் என அறிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் படம் உருவாகியிருக்கிறது.

 Fahadh Faasil earned a salary ranging from four crore rupees to five crore rupees for maamannan movie

செம ரெஸ்பான்ஸ்: பெரும் எதிர்பார்ப்போடு கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியானது. வடிவேலு இந்தப் படத்தில் மாறுபட்ட முறையில் நடித்திருக்கிறார் என மாரி செல்வராஜ் தொடர்ந்து கூறியதாலும், பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் இயக்குநருடைய படம் என்பதாலும் ரசிகர்கள் ஆர்வத்தோடு திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்தனர்.

பேசாத அரசியல்: மாரி செல்வராஜின் படைப்பில் எப்போது காத்திரமான அரசியல் இருக்கும் என்பதை மாமன்னன் படமும் நிரூபித்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாத அரசியலை ஆளுங்கட்சி அமைச்சரை வைத்தே திரையில் பேசிய மாரி செல்வராஜின் தைரியத்தை பலரும் பாராட்டியிருக்கின்றனர். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மாரி செல்வராஜ் சமரசம் செய்துகொள்ளவே இல்லை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டனர்.

மிரட்டிய ஃபகத் பாசில்: படத்தில் வடிவேலு அதகளமாக ஸ்கோர் செய்திருந்தார். அதற்கு ஈடாக இருந்தது ஃபகத் பாசிலின் நடிப்பு.குறிப்பாக இடைவேளை காட்சியில் தன்னுடைய கண்களை வைத்து அவர் நடித்தது இன்னும் பல காலத்துக்கு பேசப்படும் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அவருடைய கரியர் பெஸ்ட் படமாகவும் மாமன்னன் அமைந்துவிட்டது எனவும் தெரிவிக்கின்றனர்.

எவ்வளவு சம்பளம்: இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடித்ததற்காக ஃபகத் பாசில் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் நான்கு கோடி ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றார் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்துக்கு பிறகு ஃபகத் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 Fahadh Faasil earned a salary ranging from four crore rupees to five crore rupees for maamannan movie

கார் பரிசு: இதற்கிடையே மாமன்னன் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பா மினி கூப்பர் கார் ஒன்று பரிசளிக்கப்பட்டது. இதனை உதயநிதி உள்ளிட்டோர் நேரில் சென்று அளித்தனர். அதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த உதயநிதி மாமன்னன் படம் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X