மாடியில் இருந்து விழுந்த பகத் ஃபாசில்...காயத்தால் மருத்துவமனையில் அனுமதி
திருவனந்தபுரம் : மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் ஃபாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
நடிகை நஸ்ரியாவை காதலித்து, திருமணம் செய்து கொண்ட பகத், தற்போது மலையன் குஞ்ச் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொச்சியில் இப்படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதற்காக வீடு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

சூட்டிங்கின் போது வீட்டின் மாடி, உடைந்த விழுந்தது. இதில் மாடியில் இருந்து கீழே விழுந்த பகத் காயமடைந்தார். உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பகத் ஃபாசிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேசான காயம் தான் எனவும், காயம் காரணமாக சிகிச்சையில் இருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு பகத், சூட்டிங்கில் பங்கேற்க மாட்டார், ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகத்திற்கு மூக்கில் அடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











