Fahadh Faasil - மாமன்னன் எதிரொலி.. தலைவர் 170ல் ஃபகத் பாசில் சம்பளம் இவ்வளவா?.. அடேங்கப்பா

சென்னை: Fahadh Faasil Salary (ஃபகத் பாசில் சம்பளம்) நடிகர் ஃபகத் பாசில் தலைவர் 170ல் நடிப்பதற்கு வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு காத்துக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் செம ட்ரீட். இதனையடுத்து அவர் லைகா தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170ஆவது படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது.

உண்மை கதை?: ஜெய்பீம் படத்தின் மூலம் ரொம்பவே கவனம் ஈர்த்தவர் ஞானவேல். எனவே அவருடன் ரஜினிகாந்த் தற்போது இணைந்திருப்பதால் எந்த மாதிரியான ஜானரில் படம் வருமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. திருவனந்தபுரத்துக்கு செல்லும் முன்பு ரஜினி செய்தியாளர்களிடம் இந்தப் படம் கருத்துள்ள பிரமாண்டமான பொழுதுபோக்கு படமாக வரும் என கூறியிருந்தார். இதற்கிடையே இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் நடிப்பதற்கு அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கின்றனர். பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் அமிதாப்பும்; முதன்முறையாக் ஃபகத் பாசிலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மூன்று பேரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் என்பதால் படத்தின் மீதான ஹைப் இன்னும் ஏறியிருக்கிறது.

பட்ஜெட் எவ்வளவு: இதற்கிடையே படத்தின் பட்ஜெட் குறித்த புதிய தகவல் சமீபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது மொத்தமே இந்தப் படத்து 180 கோடி ரூபாய்வரைதான் பட்ஜெட் என்றும் அதில் பெரும்பாலும் சம்பளத்துக்கே போய்விடும்; கணக்கிட்டு பார்த்தால் படத்தின் தயாரிப்புக்கென்று மொத்தமே 40 கோடி ரூபாய்வரைதான் வரும் என்று கூறப்படுகிறது.

Fahadh Faasil Got 10 Crore Salary For Thalaivar 170 Movie

ஃபகத் பாசில் சம்பளம்: இந்நிலையில் தலைவர் 170ல் நடிப்பதற்கு ஃபகத் பாசில் சம்பளமாக பெற்றதாக ஒரு தொகை கூறப்படுகிறது. அதாவது அவர் இந்தப் படத்துக்காக பத்து கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். அதேபோல் அமிதாப் பச்சனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளமாம். முன்னதாக ஃபகத் பாசில் மாமன்னன் படத்திற்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அதன் காரணமாக தனது சம்பளத்தை இரண்டு மடங்காக ஃபகத் உயர்த்திவிட்டதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X