ஷாக்கிங்.. பகத் பாசிலுக்கு மூளையில் இப்படியொரு பிரச்சனையா?.. குணப்படுத்த வாய்ப்பு இருக்கா?

திருவனந்தபுரம்: மலையாளத்தில் உலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பகத் பாசில்.

கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்த பகத் பாசில் வில்லனாக நடித்தாலும் அவர் நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் தான் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலமாக மாறியது.

Fahadh Faasil indirectly reveals he had diagnosis for ADHD at 41

நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வரும் பகத் பாசிலுக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருக்கு அரிதான மூளை பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக அவரே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார்.

அசுரத்தனமான நடிப்பு: சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென்றால் அழகான முகம், நல்ல தலைமுடி உள்ளிட்ட சில அடிப்படை விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால், அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நல்ல நடிப்பை கொடுத்தால் மக்கள் நம்மை ஹீரோவாக பார்ப்பார்கள் என்பதை பல படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்து கெத்து காட்டி வருகிறார் பகத் பாசில்.

150 கோடி வசூல்: மலையாள திரைப்படங்கள் பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடிக்கும் குறைவான வசூலையே அள்ளும். ஆனால், இந்த ஆண்டு பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூலை அசால்ட்டாக கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி உள்ளது.

புஷ்பா 2: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. அந்தப் படத்திலும் வில்லனாக மிரட்ட உள்ளார் பகத் பாசில்.

ரஜினிகாந்த் படத்தில்: இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பகத் பாசில் நடித்து வருகிறார். ரஜினிகாந்துடன் பகத் பாசில் இருக்கும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டான நிலையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அந்த படமும் வெளியாகிறது.

அரிய வகை நோய்: நடிகை சமந்தா மயோசைட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதேபோல நடிகர் பகத் பாசிலுக்கு ADHD (Attention deficit hyperactivity disorder) கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு எனும் நரம்பியல் பிரச்சனை உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொத்தமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பகத் பாசில் இதுபோன்ற அரிய வகை நோய் குழந்தைகளையே பாதிக்கும் என்றும் குழந்தைப் பருவத்திலேயே சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், 41 வயதான தனக்கு இந்த பாதிப்பு உள்ளது என்றும் சரி செய்ய முடியுமா? என மருத்துவரை கேட்டதாக கூறியுள்ளார். இதன் மூலம் அந்த அரிய வகை நோயால் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ளாரா? என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X